Alaioli
129  ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா  ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர் வீதி உலா.

சுகுணா முனியாண்டி

ஜோர்ஜ்டவுன் ஜன 10 தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஏற்பாட்டில் 129 ஆம் ஆண்டு  நிகழ்வாக  பினாங்கு ஸ்திரீட் கோவில் வீட்டிலிருந்து  ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தேறியது.



   
விழாவின் தொடக்கத்தில் ஸ்ரீ மகா மாரியம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் உடன் பக்தி தேவாரப் பாடல்களுடன் மேலும் மெருகூட்ட நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டதுசகல அலங்காரங்களுடன்  அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் வெள்ளிக்குத்திரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 7.00 மணியளவில் பினாங்கு ஸ்திரீட்  கோவில் வீட்டிலிருந்து புறப்பட்டு டத்தோ கிராமட் சாலையில் அமைந்துள்ள நகரத்தார் சிவன் கோவிலை வந்தடைந்த போது அங்குக் குடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி தரிசித்து வழிபட்டனர்.



அங்கிருந்து பூசை முடித்துப் புறப்பட்டு மீண்டும் பினாங்கு ஸ்திரீட் கோவில் வீட்டிற்கு நள்ளிரவு 01.00 மணியளவில் வந்து சேர்க்கை சேர்ந்தது.  ஸ்ரீ மகா மாரியம்மனை நகர் வீதியில் திரளாகத் திரண்ட பக்த பெருமக்கள் ஒன்று கூடித்  தரிசித்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News