Alaioli
மலேசிய கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாட்டில்  பாராட்டு விழா

செபராங் ஜெயா மார்ச் 3 - இந்நாட்டில்  தமிழ்க் கல்வி மற்றும் இலக்கிய வளர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கில்,மலேசிய கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாட்டில்  பாராட்டு விழா நடைபெறும் என  மலேசிய கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் தி.எஸ் முனைவர் வேலாயுதம் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சி வரும் 5 ஏப்ரல் 2026, மாலை 2.00 மணிக்கு,செபராங் ஜெயாவில் உள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்  தி.எஸ் முனைவர் வேலாயுதம் கிருஷ்ணசாமி  உடன் வருகை அளித்த ஏற்பாட்டுக் குழுவினருடன் அவர் தெரிவித்தார். 

 

உலகளவில் மொழித்திறனிலும் தமிழ் இலக்கியங்களிலும் பங்களித்துச் சிறந்து விளங்கும் பேராக் மாநில  சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு  இணைப்பேராசிரியர் மனோன்மணி  தேவி அண்ணாமலை அவர்களுக்கு அவர் ஆற்றிய தமிழ் பணிக்காக இவ்வரலாற்றுமிக்க விழாவில் சிறப்பிக்கப்படவுள்ளார்  என்று தி.எஸ் முனைவர் வேலாயுதம் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும்  தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியின் நோக்கம்

இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமானது பேரா மாநில மூவாலிம் மாவட்டத்தில் அமைந்த்துள்ள சுலுத்தான் துரீசு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு  இணைப்பேராசிரியர் மனோன்மணி  தேவி அண்ணாமலை அவர்களுக்குச் சிறப்புச் செய்வதே ஆகும். மேலும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தொண்டு செய்த தமிழ்நெஞ்சங்களையும் ஆசிரியர்களையும் வானொலி தொலைக்காட்சி பேச்சு அச்சு எழுத்து ஊடகவியலாளர்களையும் மொழித்துறை சார்ந்த புலமை பெற்றுவர்களையும் ஒன்றிணைத்துத் தமிழ்மொழி உணர்வை ஏற்படுத்துவதற்கே இவ்விழா நடத்தப்படுகின்றது.

 

தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு அவசியம்

கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக தி.எஸ் முனைவர் வேலாயுதம் கிருஷ்ணசாமி  குறிப்பிட்டார். தமிழ்ப்பள்ளிகளை மூடும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற அச்சமும் நிலவுகிறது. அரசியல் மிக வலிமையானது. ஆனால், அதைவிட வலிமை பெற்றது மொழியாகும். இனத்தின் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. இதனை வலியுறுத்த கல்வி மற்றும் மொழி சார்ந்த நிபுணர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்விழா நடத்தப்படுகின்றது என்றார்.ஆசிரியர்களே நமது சமுதாயத்தின் உயர்விற்கு வழிகாட்டிகள். அவர்கள் இல்லையேல் நாம் யாவருமில்லை.

 பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாட்டில் நமது தமிழ்மொழி வளர்ச்சியின் அவசியம்

பல்வேறு இன மக்கள் வாழும் மலேசியாவில், தாய்மொழிக் கல்வி மிகவும் முக்கியமானது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆக்கத்திறனையும் ஊக்கத்தையும் வழங்குவதன் மூலம் தமிழ்மொழிக் கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


உலகளவில் மொழிப் புலமை பெற்றவராகத் திகழும் இணைப்பேராசிரியர் முனைவர்னோன்மணி தேவி அண்ணாமலையைக் முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குகின்றனர். அந்நோக்கத்தின் அடிப்படையிலே அவருக்குப் பாராட்டு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

 இவ்விழாவில் சிறப்புப் பாராட்டுகள் செய்யப்படும்

வ்விழாவில் தமிழ்மொழிக்காகச் சமக்காலத்தில் நம்மொடு வாழ்ந்தவர்கள் பல ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்மொழிக்குச் சேவை செய்தவர்களுக்கு 10 பிரிவுகளில் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புச் செய்யப்படும். ஏட்டுக்கல்வி, தொழிற்கல்வி மற்றும் உடல் மனம் ஆரோக்கியக் கல்வித் துறைகளில் 50 பேருக்குப் பாராட்டுச் செய்யப்படும்.

 இப்பாராட்டு விழாவில் பிரதான வருகையாளர்கள்

இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி  தேவி அண்ணாமலை அவர்களுக்கு நடத்தப்படும் இப்பாராட்டு விழாவை பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் வீடமைப்பு சுற்றுச்சூழல் அமைச்சருமான மாண்புமிகு டத்தோ சிறீ சுந்தராஜூ சோமு அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துத் திறப்புரை வழங்கவுள்ளார். மேலும், முனைவர் அவர்களுக்கு ஆசி வாழ்த்துரையைத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் /கெளரவ செயலாளர் மேன்மைமிகு டத்தோ பி.சகாதேவன் அவர்கள் வழங்கவுள்ளார். இவ்விழாவில் நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியிலாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் நிபுணர்கள் என்று நாடு முழுவதும் வருகைதந்து முனைவர் அவர்களுக்குச் வாழ்த்தயுள்ளனர்.

 தொடர்ச்சியான முயற்சி

ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்; தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து நடத்தப்படும் முயற்சியாக இது அமையும் என்று முனைவர் வேலாயுதம் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கல்வியை பாதுகாக்க சமூகத்தின் ஒற்றுமையான ஆதரவு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

 

தமிழ்மொழியை  நேசித்துச் சுவாசிக்கும் யாசிக்கும் அனைவரும் இவ்விழாவில் கலந்து இணைப்பேராசிரியரை அவர்களைச் சிறப்பிக்கும்படி  மலேசிய கல்வி கோன் கல்வி மேம்பாட்டு அமைப்புப் பொறுப்பாளர்களும் ஏற்பாட்டுக் குழுவினர்களும் அன்போடு அழைக்கின்றோ

 

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி இரா. காந்தியம்மா அவர்கள், கல்வி கோன் செயலர் ஆசிரியர் திரு. மனோஷ் இராமா, கல்விகோன் துணைத் தலைவர் ஆசிரியை திருமதி ஆ. லோகேஸ்வரி ஆறுமுகம், கல்விகோன் தலைவர் விரிவுரையாளர், பொறியிலாளர் தி.எஸ். டாக்டர்  வேலாயுதம் கிருஷ்ணசாமி, கல்விகோன் பொருளாளர் குமாரி. சிவனேஸ்வரி கெங்காதரன், திரு. குமரேசன் முனியாண்டி, பாராட்டு விழா இணை ஒருங்கிணைப்பாளர், கல்வி கோன் நிர்வாக உறுப்பினர் மற்றும் திரு. க. சந்திரகாந்தன், பாராட்டு விழாஒருங்கிணைப்பாளர் கல்வி கோன் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் உடன்  கலந்துகொண்டனர்.  

 

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News