Alaioli
மகளிர் தினத்தையொட்டி பினாங்கில் மலர்கள் விநியோகித்து ஜ.செ.கவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

பினாங்கு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பினாங்கு மாநில ஜ.செ.கவினர் முதல்வர் சௌ கொன் இயாவ் தலைமையில் இங்கிருக்கும் ஆயர் ஈத்தாம் வட்டார சந்தையைச் சுற்றிலும் பற்பல வண்ண மலர்களை பொது மக்கள் மத்தியில் பரவலாக விநியோகித்து, இந்நன்னாளின் சிறப்பினை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொண்டனர்.


அண்மைய பல ஆண்டுகளாக மாநிலத்தில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் கட்சியாக ஜ.செ.க திகழ்ந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, இக்கட்சியைச் சார்ந்த தலைவர்களும் இதர முக்கியப் பிரமுகர்களும் சமூகத்திற்கு நன்றி பாராட்டும் விதமாக, இந்த மலர் விநியோகிப்பு நடவடிக்கையில் ஈடுபாடு காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


பற்பல வண்ணமயமான ஏறத்தாழ ஈராயிரம் மலர்த் தண்டுகளை தத்தம் கைகளில் ஏந்திக் கொண்டு வலம் வந்த அரசியல் தலைவர்கள், தாங்கள் கண்ணுற்றப் பெண்களிடம் அவற்றை வழங்கி, மகளிர் தின வாழ்த்தினை தெரிவித்த போது,அவற்றை இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட பெண்கள் நன்றி பாராட்டி தங்களது வாழ்த்தினையும் கூறிக் கொண்டனர்.


தற்காலத்தில் பெண்களின் வலிமை திறமை, மேலாண்மை யாவுமே அனைத்து துறைகளிலும் நன்கு மேலிடுவதாகவும், இவர்களது தனித்துவமும் சமயோசிதமும் உலகெங்கிலும் வியாபித்திருப்பதை மறுப்பதற்கில்லை என்பதால், மகளிர் தினம் ஓர் உன்னத நாளாக உலகளாவிய நிலையில் உணரப்பட்டு  அனுசரிக்கப்படுவதாக, முதல்வர்  சௌ கருத்துரைத்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News