Alaioli
மனநலம் குன்றிய மனிதரிடம் பக்குவமாய் செயல் பட வேண்டும்-டாக்டர் மலிண்டாவதி ஆலோசனை

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 14- மனநலம் குன்றிய நிலையில் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு வார்டுகளில் அனுமதிக்கப்படும் மனிதர்களிடம் (நோயாளிகள்) மருத்துவ உதவியாளர்கள் முரட்டுத் தனமான நடந்து கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் பக்குவமாக கையாண்டு அவர்கள் நலனையும் நோய் தன்மைகளையும் அறிந்து செயல்பட வேண்டும் என்று  டாக்டர் மலிண்டாவதி முகமட் ஃபட்ஷில் ஆலோசனை விடுத்தார்.


பந்திங் மருத்துவமனை பீளேக் கூலியாவில்  'மன நல பாதிப்பும் அதற்கான நடவடிக்கை அணுகுமுறைகள்' எனும் தலைப்பில் இன்று காலையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய டாக்டர் மலிண்டாவதி மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார். 



அதிகப் பட்ச போதைப் பொருள் பழக்கம், மது அருந்துதல், சாலை விபத்தில் தலையில் பலமாக அடிப்பட்டு நினைவை இழத்தல், குடும்பப் பின்னணியில் உருவாகும் கொடூரமான பாதிப்புகள், வாழ்நாளில் அளவு கடந்த போராட்டம் என்று பல நடவடிக்கைகள் காரணமாக மனம் பாதிக்கப்பட்டு அழுத்தம் கூடுதலாக அதிகரிக்கும் போது மனநலம் குன்றிய நோயாளிகளாக மனிதர்கள் மாறக் கூடும் என்பதையும் பயிற்சிப் பட்டறையில் அவர் கூறினார்.


இந்தப் பயிற்சிப் பட்டறையில் 50 மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News