Alaioli
150 க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டும் தமிம் டாஹ்ரி மீது எந்த நடவடிக்கை இல்லை= சமூக ஆர்வலர் உமாகாந்தன் கிருஷ்ணன் கண்டனம்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலாலம்பூர் மார்ச் 11  லங்காவியில் நூறாண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய தலை வாசலில் வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தை காலால் மிதித்து சேதப்படுத்திய மத எதிர்ப்பாளர் தமிம் டாஹ்ரியின் செயலைக் கண்டித்து அதன் ஆலய நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர் உமா காந்தன் கிருஷ்ணன் தமது கருத்தை வெளியிட்டார். நாட்டின் வடக்கில், லங்காவியில் அமையப் பெற்ற முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருடன் நேரில் சென்று சந்தித்து மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கம் அளித்தார். 


கெடாவில் மிகவும் பிரபலமான தொழிலதிபருக்குச் சொந்தமான நிலப் பகுதியில் உருவான ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தலை வாசலில் வைக்கப்பட்டிருக்கும் திரி சூலத்தை வணங்கியப் பிறகே அவர்கள் ஆலயத்தில் நடைபெறும் பூஜை புனஸ்காரங்களில் கலந்து கொள்வர் என்றும் உமா காந்தன் கூறினார். இங்கு, லங்காவி மலை அடிவாரத்தில்  அமைந்துள்ள இந்த ஆலய தலை வாசலில் வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தை அத்துமீறி காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரிக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்று அவர் கூறினார்.


லங்காவியில் அதிகம் வாழும் இந்தியர் குடியிருப்புக்கு அருகில் மலை அடிவாரத்தை ஒட்டிய இடத்தில் பிரபல தொழிலதிபரின் முழு அனுமதியுடன் கட்டப்பட்ட ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த திரி சூலத்தை மிதித்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரியின் உள் நோக்கம்தான் என்ன, தமிம் டாஹ்ரியை போலீசார் ஏன் இதுவரை கைது செய்யவில்லை, பக்தர்கள் வழங்கிய புகார்களுக்கு செவி சாய்க்காத காவல் துறையினர் இனியாவது சரியான விளக்கம் தர வேண்டும் என்று உமா காந்தன் தமது வேண்டுகோளை முன் வைத்தார்.


நேற்று மதியம் ஆலய நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனினும், ஒரு நாள் கடந்த பின்னும் இதுவரை தமிம் டாஹ்ரியை கைது செய்யாமல் இருப்பதன் மர்மம் என்ன, அரசியல் செல்வாக்கா என்பதும் அனைவருக்கும் புரியவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் ஆலய நிர்வாகத்தினருடன் சுற்று வட்டார இந்து பக்தர்களும் அங்கு திரண்டிருந்தனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News