Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
ஷா ஆலம். மார்ச் 12. உயர் கல்விக் கூடங்களில், தனியார் கல்வி நிலையங்களில் பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கான மாநில அரசின் 3 ஆயிரம் ரிங்கிட் உதவி கல்வி நிதியைப் பெறுவதற்கான மனு பாரங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இன்று திரளாக நேரில் வந்து கலந்து கொண்ட மாணவர்கள் அரசு செயலகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமானின் அலுவலகத்தில் குழுமிருந்தனர் என்று அவரின் பிரதிநிதியாக இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக வழி நடத்திய ஐ..சீட் உதவிப் பொருள் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்திய மாணவர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்தக் கல்வி நிதிக்கு நாளை 13.3.2026 காலை 11 மணியளவில் இதே அலுவலகத்தில் தங்களது மனு பாரங்களை நேரில் வந்து ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இந்திய மாணவர்களின் மனு பாரங்கள் அலுவலக அதிகாரிகளால் முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று மாதவன் அலை ஒளியிடம் கூறினார். மனு பாரங்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களும் அவரது பெற்றோரும் அலுவலக வாசலில் கலந்து திரண்டிருந்தனர்.
பீடோர்
வீட்டு விலை & ஊராட்சியில் மாற்றம் கொண்டுவந்தவர் அமைச்சர் NGA KOR MING ; B40 மக்கள் உடன்பாடு : டத்தோ சிவநேசன் மகிழ்ச்சி..!
புத்ராஜெயா
Salah guna PLS: JIM berkas 9,497 warga asing dari Jan hingga 9 Mac 2026
ஷா ஆலம்
உயர்கல்விக் கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கான உதவிநிதி பதிவு= மாதவன் முனியாண்டி விளக்கம்.
பினாங்கு
நோன்பாளர்களுக்கான தாகசாந்தி வைபவத்தில் அரசியல் தலைவர்களுடன் மாநகர் மன்ற மேயர் பங்கேற்பு!
கோலாலம்பூர்
Bukit Aman umum pertukaran 11 pegawai kanan PDRM
பேராக்
பல்லின இனங்களுக்கிடையே ஒற்றுமையைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா மாநில ஐ.பி.எப் தலைவர்கள் கோரிக்கை
கிள்ளான்
உலக மகளிர் தினத்தைக் கொண்டாடிய பெண்களுக்கு வீ.கணபதிராவ் மலர்க் கூடைகள் வழங்கி வாழ்த்து.
கெடா
150 க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டும் தமிம் டாஹ்ரி மீது எந்த நடவடிக்கை இல்லை= சமூக ஆர்வலர் உமாகாந்தன் கிருஷ்ணன் கண்டனம்.