Alaioli
நோன்பாளர்களுக்கான  தாகசாந்தி வைபவத்தில் அரசியல் தலைவர்களுடன் மாநகர் மன்ற மேயர் பங்கேற்பு!

பினாங்கு மார்ச் - பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ்டவுன் பகுதியில் அமைந்திருக்கும் ஜாலான் பிந்த்தால் தாலி சாலையிலுள்ள மசூதியில், நேற்று அனுசரிக்கப்பட்ட நோன்பாளர்களுக்கான தாகசாந்தி வைபவத்தில், மாநிலத்தின் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


தற்போதுநோன்பு மாதம் என்பதால், இஸ்லாமிய சமூகத்தின் நோன்பு அனுசரித்து வரும் நிலையில், இதற்கான தாகசாந்தி வைபவம், இங்கிருக்கும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளால் தாராள உணர்வுடன் நடத்தப்படுகின்ற நிலையில்,இவற்றில் பல்லின சமூகத்தினரும் அழைக்கப்பட்ட விருந்தினர்களாக கலந்து கொண்டு, தங்களின் சகோதரத்துவத்தையும் அன்பையும் பரிமாறிக் கொள்வது ஒரு வழக்கமாக நிகழ்ந்து வருகிறது.


அவ்வண்ணம் பிந்த்தால் தாலி சாலையின் மசூதியில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடுத் துணையமைச்சரும் இங்கிருக்கும் தஞ்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங் மற்றும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் ஆகிய இருவரும் பிரதானப் பிரமுகர்களாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், மேயர் ராஜேந்திரன் தம்பதியினரும் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையளித்திருந்தனர்.


நோன்பாளர்கள் தராவிஹ் என்றழைக்கப்படும் இறை வழிபாட்டிற்குப் பின்னர் மோரே எனப்படும் தாகசாந்தி உணவுப் படையலின்போது, துணையமைச்சர் லிம் ஹூய் யிங் மசூதியின் நன்கொடை அடையாளப் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனதுப் பரிவினை மெய்ப்பித்தார்.தொடர்ந்து எளியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மசூதி சார்பில் உணவுக் கூடைகள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.

Post ImagePost Image

Leave a Comment
Trending News