Alaioli
உலக மகளிர் தினத்தைக் கொண்டாடிய பெண்களுக்கு வீ.கணபதிராவ் மலர்க் கூடைகள் வழங்கி வாழ்த்து.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கிள்ளான் மார்ச் 11.  அனைத்துலக மகளிர் தினத்தை பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளுடன் இணைத்து நேர்த்தியாகக் கொண்டாடிய ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் அணியினருக்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் மலர்க் கூடைகள் எடுத்து வழங்கி தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாக அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பொறுமை யெனும் நகையணியும் பெண்கள் இல்லத்தின் உயர்வுக்கு வழங்கி வரும் உன்னத சேவையும் அர்ப்பணிப்பும் அளப்பரியது என்று கணபதிராவ் தமது உரையில் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியை இங்கு சிறப்பாக ஏற்பாடு செய்து வழிநடத்திய மகளிர் தலைவி புவனேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அரிய பணி சிறப்பு என்றும் அவரது உரையில் குறிப்பிட்டார். நாட்டில் செயல்படும் அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் பெண்மணிகளின் சேவை சமூக உயர்வுக்குப் பெருமை சேர்க்கிறது என்று அலை ஒளியிடம் கணபதிராவ் தெரிவித்தார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News