Alaioli
பல்லின இனங்களுக்கிடையே   ஒற்றுமையைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா மாநில ஐ.பி.எப்  தலைவர்கள் கோரிக்கை

பேராக் மார்ச்சு 11நாட்டில் 3R (இனம், மதம், அரசர்) தொடர்பான விஷயங்களில் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், சிலரின் பொறுப்பற்ற செயல்களுக்கு எதிராக ஏன் 3R சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது என பேராக் மாநில ஐபிஎப் தலைவர்கள்  கேள்வி எழுப்பினர்.


வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது மக்களிடையே இன பதற்றம் அதிகரித்து வருவதைப் பலரும் உணர்ந்து வருகின்றனர். அதேவேளையில் உண்மையான மலாய் சமூகத்தினர் இந்தியர்களின் பங்களிப்பையும் தியாகங்களையும் நன்றாக அறிந்துள்ளனர்; அவற்றை மறக்கவில்லை. ஆனால் இடையில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய ஒரு சிலர் மட்டுமே சில்லறை தனமான செயல்களில் ஈடுபட்டு இந்தியச் சமூகத்தினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருவதாக பேராக் மாநில ஐபிஎப் உதவி தலைவரான டி இராஜேந்திரன் தெரிவித்தார்.


முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் நீண்ட காலமாகக் கையாளப்பட்டு வருகிறது. அந்த விவகாரத்தை அரசாங்கமே சட்டப்படி கவனிக்க வேண்டும். ஆனால் நாட்டின் பிரதமர் முறையாகக் கட்டப்படாத வழிபாட்டுத் தலங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது முற்றிலும் தவறானது என பேராக் மாநில ஐபிஎப் உதவி தலைவர்களில் ஒருவரான வி.கந்தசாமி தெரிவித்தார்.


நமது நாட்டில் இந்தியர்களும் சமமான குடியுரிமை கொண்டவர்கள். அவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள இந்த நாட்டின் பிரஜைகள் என்பதையும் சிலர் புறக்கணிப்பது வருத்தத்திற்குரியது. ருக்குன்  நெகாரா என்ற நல்லிணக்கக் கொள்கைக்கு ஏற்ப அனைத்தும் நடை பெற வேண்டும்,


இந்த விவகாரம் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் இனங்களுக்கிடையே தேவையற்ற மோதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஆகையால் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பேராக் மாநில உதவி தலைவர்களில் ஒருவராக டாக்டர் கி.வாசன் விவரித்தார் 


பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நமது நாட்டில் இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்துகொண்ட ஜம்ரி வினோத், செகு சந்திரா,பிர்டாவ்ஸ்  ஒங் மற்றும் சூலத்தைக் காலால் மிதித்த நபர் போன்றோரின் பொறுப்பற்ற செயல்களைப் பேரா மாநில ஐ.பி.எப் உதவித் தலைவர்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். மேலும், இவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினராக வி.பெரியசாமி தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News