Alaioli
டிகே.மூர்த்தி,
பீடோர், மார்ச் 12-வீடமைப்பு மற்றும் மாநகராட்சிக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் வீட்டின் விலையை குறைக்கும் நேர்மறையான நோக்கத்தில், குறைந்த வருமானம் பெறுவோர் பொருளாதாரப் பிரச்சினையின்றி சொந்த வீடு வாங்குவதற்கான நிலைப்பாட்டை உறுதிச் செய்ததுடன், வரலாற்றில் அனைவரின் கவனத்தையும், அதீத நம்பிக்கையையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் “அலை ஒளி” சமூக ஊடகச் செய்தியாசிரியரிடம் கூறினார்.
அமைச்சரைப் பொறுத்தவரை இன மற்றும் மதம் என்பதைத் தாண்டி, சொந்த வீடு இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த B40 சேர்ந்த மலேசியர்களுக்கு சொந்த வீடு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆய்வு நடத்தியுள்ளார். அதன்படி தனியார் வீடமைப்பில் வீட்டின் விலை ஏழைகளால் வாங்குவதற்கு பொருளாதாரம் (மாத வருமானம்) இடம் தரவில்லை. இவர்களுக்கு பொருளாகத்தில் கடன் பெறுவதும் ஒரு சிக்கலாகவே கருதப்பட்டது. ஆனால், அமைச்சரின் திட்டத்தின் மூலம் சொந்த வீடு வாங்குவதற்கு அதன் விலையால் எளிமையாக்கப்பட்டது என்றும் டத்தோ சிவநேசன் அந்நிலையில் சாதாரண தொழிற்சாலை பணியாளர்கள் முதல் வாடகை கார் ஓட்டுநர்கள் வரை வீடு வாங்குவதில் பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை. அமைச்சரின் வீடமைப்பு திட்டத்திற்கு உடன்படுகின்றனர். எட்டாக்கனியாக இருந்த வீட்டின் விலை கையில் கிட்டும் கனியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கோல சிலாங்கூர் தொகுதியை சேர்ந்த மேரி தோட்டம், சுங்கை திங்கி தோட்டம் மற்றும் நைகல் கார்டன் ஆகிய முன்னாள் தோட்டப் பாட்டாளிகளுக்கு குறைந்த விலையில் சொந்த வீடமைப்பு திட்டம் உருவாக்கி அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தி வைத்துள்ளார்.
பெர்ஜெயா என்ற தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, அரசாங்க சார்பில் மனித வள அமைச்சர் மற்றும் வீடமைப்பு அமைச்சர் ஆகிய கூட்டணியில், சுங்கை திங்கி தோட்டத்தில் சுமார் 240 வீடுகளுக்கான கட்டுமானத்திற்கு தேவையான நிலத்தை, அந்த பெர்ஜெயா நிறுவனம் மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு வீட்டின் விலை சுமார் ஒரு லட்சம் வெள்ளி. ஆனால், வீடமைப்பு அமைச்சின் கீழ் வீட்டின் விலை சுமார் 45,000 வெள்ளிக்கு முன்னெடுக்கப்பட்டது. இந்த மேம்பாட்டு திட்டம் முடிந்தப் பிறகு குறிப்பிட்ட தோட்ட முன்னாள் பாட்டாளி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அடிக்கல் நாட்டு விழாவின் போது அமைச்சர் ஙா கோர் மிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீடோர்
வீட்டு விலை & ஊராட்சியில் மாற்றம் கொண்டுவந்தவர் அமைச்சர் NGA KOR MING ; B40 மக்கள் உடன்பாடு : டத்தோ சிவநேசன் மகிழ்ச்சி..!
புத்ராஜெயா
Salah guna PLS: JIM berkas 9,497 warga asing dari Jan hingga 9 Mac 2026
ஷா ஆலம்
உயர்கல்விக் கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கான உதவிநிதி பதிவு= மாதவன் முனியாண்டி விளக்கம்.
பினாங்கு
நோன்பாளர்களுக்கான தாகசாந்தி வைபவத்தில் அரசியல் தலைவர்களுடன் மாநகர் மன்ற மேயர் பங்கேற்பு!
கோலாலம்பூர்
Bukit Aman umum pertukaran 11 pegawai kanan PDRM
பேராக்
பல்லின இனங்களுக்கிடையே ஒற்றுமையைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – பேரா மாநில ஐ.பி.எப் தலைவர்கள் கோரிக்கை
கிள்ளான்
உலக மகளிர் தினத்தைக் கொண்டாடிய பெண்களுக்கு வீ.கணபதிராவ் மலர்க் கூடைகள் வழங்கி வாழ்த்து.
கெடா
150 க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டும் தமிம் டாஹ்ரி மீது எந்த நடவடிக்கை இல்லை= சமூக ஆர்வலர் உமாகாந்தன் கிருஷ்ணன் கண்டனம்.