Alaioli
ஜொகூர் 2025 முதலீட்டு வளர்ச்சி 253 பில்லியன் ரிங்கிடை எட்டியது — லீ திங் ஹான்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு,  நவ.20-ஜொகூர் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் சமீப ஆண்டுகளில் வேகமாக உயர்ந்து வருவது, மாநிலத்தின் திட்டமிட்ட அடிக்கட்டு அபிவிருத்தி, துல்லியமான கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையின் நேரடி விளைவாக இருக்கிறது. பல துறைகள் இணைந்து முன்னேறும் தற்போதைய வளர்ச்சி சூழல், ஜொகூரை நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக மாற்றி வருகிறது.


ஜொகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனிதவள ஆட்சிக்குழு தலைவர் லீ திங் ஹான் மாநிலம் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி ரி.ம 91.1 பில்லியன் முதலீட்டு உறுதிப்பாடுகளைப் பெற்றிருப்பதாகவும், இதனால் மொத்தம் ரி.ம 253 பில்லியன் முதலீடுகள் இம்மாநிலத்தின் நிர்வாகக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனுடன், 65,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார். 


அதேபோல், ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை நோக்கி 11 முக்கிய துறைகள் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பசுமை சக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் போன்ற உயர் தாக்கம் கொண்ட துறைகள் புதிய வளர்ச்சியின் தளமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. வரவிருக்கும் JS-SEZ நீண்டகால வளர்ச்சி திட்ட வரைவு (ப்ளூப்பிரிண்ட்) 2026 முதல் காலாண்டில் வெளியிடப்படவுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், \"Made in Johor\" முயற்சியின் மூலம் உள்ளூர் தொழில்களை உயர்த்தி, ஆராய்ச்சி–முனைவு, தானியங்கி மயக்கம், தரச் சான்றிதழ் போன்ற துறைகளில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான திறன் மேம்பாட்டை அரசு முன்னெடுத்து வருகிறது. அதே சமயம், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு சவால்களை சமாளிக்க ‘ஜுவாலன் ரஹ்மா’ போன்ற திட்டங்கள் விரிவாக்கப்பட்டு, 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்பதி குறிப்பிட்டார்.


மாநிலத்தின் பொருளாதாரப் பலம், சமூக நலத்திட்டங்கள், உறுதியான அடிக்கட்டி, திறமையான ஆட்சி ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஜொகூரை தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய பொருளாதார மையமாக உயர்த்தும் பாதையில் முன்னெடுத்து செல்கின்றன என அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment
Trending News