Alaioli
ஸ்ரீ செமர்லாங்கூ தமிழ்ப்பாலர்ப்பள்ளிக்கு வெ.30,400 மானியம் - சிவநேசனுக்கு நன்றி!!

பீடோர்,நவ21: பீடோர் வட்டாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ செமர்லாங்கூ தமிழ்ப் பாலர்ப்பள்ளிக்கு சுங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் வெ.30,400ஐ மானியமாக வழங்கினார்.


சுமார் 35 ஆண்டுகள் கடந்து நனிச் சிறந்த தமிழ் சேவையை வழங்கி வருவதோடு இவ்வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளுக்கு முதலாம் ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வழி செய்யும் இப்பாலர்ப்பள்ளியின் உருமாற்றத்திற்காக இம்மானியம் வழங்கப்பட்டதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


இவ்வட்டாரத்தில் இயங்கும் ஒரே தமிழ்ப்பாலர் பள்ளியான ஸ்ரீ செமர்லாங்கூ நேரடியாக இவ்வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க பெரும் பங்களிப்பு செய்யும் நிலையில் அப்பள்ளியின் உருமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் இம்மானியம் பெரும் உதவியாக இருக்குமென டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.


ஸ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளியின் உருமாற்றத்திற்கும் அதன் தேவைகளை நிறைவு செய்யவும் டத்தோ சிவநேசன் வழங்கிய இம்மானியம் பெரும் உதவியாகவும் தொடர்ந்து சிறப்பாக இயங்குவதற்கான நம்பிக்கையாகவும் திகழ்வதாக அதன் தலைமை நிர்வாகியும் ஆசிரியுமான திருமதி.சரஸ்வதி பானு கூறினார்.


முன்னதாக இப்பள்ளியின் விளையாட்டு போட்டிக்கும் டத்தோ சிவநேசன் வெ.2000 வழங்கியதையும் நினைவுக்கூர்ந்த அவர் மாண்புமிகு சிவநேசனுக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் தெரிவித்து கொண்டார்.

Leave a Comment
Trending News