Alaioli
சிறந்த தலைமைத்துவ விருதினை வென்ற பினாங்கு       மாநகராட்சிக்கு நிர்வாகக் குழு கூட்டத்தில் பாராட்டு!

பினாங்கு நவம்பர் 21பினாங்கு மாநகர் மன்றத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று இங்கு நிகழ்ந்த வேளையில் மாநிலத்தில் பொது மக்கள் நலன் பேணும் பற்பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அவற்றுள் மன்ற உறுப்பினர்கள் சிலர் பரிந்துரைத்த சில நலத் திட்டங்கள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பில் நல்லிணக்கம் காணப்பட்டன.


பினாங்கு மாநகர் மன்ற மேயராகப் பொறுப்பேற்றிருக்கும் டத்தோ அ.ராஜேந்திரனின் தலைமையுரைக்குப் பின்னர் அவை தொடங்கியபோது, மாநிலத்திம் மாநகராட்சியின் நிர்வாகப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வணிக வளாகங்கள், வாகன தரிப்பிடங்கள் போன்றவற்றின் தற்கால மேம்பாடுகள் குறித்து மாநகர உறுப்பினர்கள் சிலர் அவையில் விவாதம் நடத்தி, உரிய விளக்க அறிக்கைகளையும் உடன் சமர்ப்பித்தனர்.


அத்துடன் இக்கூட்டத்தில் அண்மையில் நாட்டிலுள்ளஉள்ளூர் அமைப்புகளுக்கான சிறந்த தலைமைத்துவ விருது,மாநில மாநகராட்சிக்கு கிட்டியிருப்பது தொடர்பில் மேயர்ராஜேந்திரன் பெருமிதம் கூறிய வேளையில் அவையிலிருந்த இதரப் பிரமுகர்கள் யாவரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கரவொலிகள் எழுப்பியும் இச்சிறப்புகுரிய அங்கீகாரத்தை பேருவகையுடன் வரவேற்றனர்.



மாநகர் மன்றத்தின் விவேகமிக்கச் செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய அங்கீகாரம் உண்மையில் பினாங்கு மாநிலத்தின் வளங்குன்றா வளர்ச்சியைத் தக்க வைப்பதில், மன்றத்தின் அபரிமிதச் செயல் திட்டங்கள் பெரும் பங்களிப்பை நல்கியிருப்பது குறித்து, உலகளாவிய நிலையில் உணர்த்தப்பட்டிருப்பது போற்றுதலுக்குரியது என்று, அவைப் பிரமுகர்கள் யாவரும் ஒருசேர தத்தம் உள்ளக் களிப்பை பெரும் கரவோஷத்துடன் எழுப்பி உற்சாக முழக்கமிட்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News