Alaioli
சபா அரசியல்: அதீத நம்பிக்கை வேண்டாம், கட்சி இயந்திரம் முழுவீச்சில் – டத்தோ ஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு, நவம்பர் 21 – பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதற்காக வெற்றி உறுதி என்று பக்காத்தான் ஹாராப்பான் எண்ணக்கூடாது என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.

ரமணன் கூறியதாவது,
சபா அரசியலின் உண்மை வேறுபட்டது. கடைசி 24 மணி நேரத்தில் அரசியல் கணக்குகள் முழுவதும் தலைகீழாக மாறிவிடலாம். அதனால் அதீத நம்பிக்கையை விட கடின உழைப்பை முன்னிலைப்படுத்த வேண்டும்.


மொயோக் தொகுதி பக்காத்தான் வேட்பாளர் ரெமிஸ்தா ஜிம்மி தெய்லர் உடன் பிரச்சாரம் முடித்தபின் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் பிரச்சார இயந்திரம் தற்போது முழுக்கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.“இப்போது எங்கள் இயந்திரம் முழுவீச்சில் உள்ளது. ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறோம். வாக்குகள் எதிரணிக்கு தாவாதபடி பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையும், இடைவிடாத உழைப்பும் மிக முக்கியம்.


இங்கு அரசியல் நிலை மிகவும் நிலையற்றது என்பதையும் ரமணன் சுட்டிக்காட்டினார்.“இங்கு அரசியல் அலைகள் திடீரெனத் திசை மாறிவிடும். எனவே நம்பிக்கையால் அல்ல, தர்மத்தால் மற்றும் உழைப்பால் தான் வெற்றியைப் பெற முடியும்.” என அவர் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Comment
Trending News