Alaioli
வளரும் இளம்  மாணவர்கள் தங்களது ஆரோக்கியத்தைப் பேணவும் அதே வேளையில் கட்டொழுங்கைக் கடைப் பிடிக்க வகைச் செய்யும் வகையிலும் சுக்கான் தாடிக்கா டயா மிண்டா அமைந்துள்ளது

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், மே 24 - வளரும் இளம் வயது மாணவர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் அதே நேரத்தில் மன வளத்தையும் அதிகரிக்கும் நடவடிக்கையாகவும்  டயா மிண்டா பாலர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான்,  போட்டி நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.


இங்கு, பந்திங் தெலுக் டத்தோ டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற டாயா மிண்டா பாலர் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவர், பங்கேறற  மாணவர்களின் ஆரோக்கியம் கட்டொழுங்கு போன்ற அம்சங்கள் இது போன்ற புறப் பாட நடவடிக்கைகள் வாயிலாக அவர்கள் பெற முடியும் என்று  கூறினார். 


டயா மிண்டா பாலர் பள்ளி மாணவர்கள் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு, மாணவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கிய அதன் ஆசிரியர்கள் சேவைகளை  வெகுவாகப் பாராட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News