Alaioli
ஐபிஎப் பாகான் டத்தோ  தொகுதியின் 34 ஆம் ஆண்டு பொது கூட்டம்

By Alaioliteam

பாகான் டத்தோ மே 19 - ஐபிஎப் பாகான் டத்தோ தொகுதியின் 34 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் தொகுதியின் தலைவர் திரு சு.அப்பளசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நேற்று இங்கு உள்ள ஊத்தான் மெலிதாங் தெலுங்கு மண்டபத்தில் 17-5-26 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது 


இந்த ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு வருகைத்தந்து கூட்டத்தை அதிகாரபூர்வமாக திரப்போரை ஆற்றி திறந்து வைத்தார் துணைப் பிரதமர் மாண்புமிகு சாஹிட் ஹாமிடி அவர்களின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி திரு அரவிந்த் அப்பளசாமி அவர்கள் வருகை தந்தார்.


அவருடன் ஐபிஎப் கட்சியின் தலைமையகத்தை பிரதிநிதித்து பினாங்கு மாநில ஐபிஎப் தலைவர் டாக்டர் ச.குமரேசன் அவர்களும் வருகை தந்திருந்தார். 


ஐபிஎப் பாகான் டத்தோ தொகுதியைச் சார்ந்த கிளைத்தலைவர்கள் மாதர் பகுதி பொறுப்பாளர்கள் இளைஞர் பகுதி பொறுப்பாளர்கள் என 150க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 


இந்த மாநாட்டில் திறப்புரையாற்றிய துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி திரு அரவிந்த் அப்பாளசாமி அவர்கள் தாம் இந்த மண்ணின் மைந்தன் என்பதால் கூடுதல் அக்கறையுடன் இந்த வட்டாரத்தில் வாழும் நம்முடைய இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை கவனித்து அதற்கான தீர்வுகளையும் குறுகிய காலத்தில் வழங்கி வருவதாக கூறினார்.


அதே வேளையில் நாட்டின் துணை பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சாஹிட் ஹாமிடி அவர்கள் இத்தொகுதியின் வளர்ச்சிக்காக தொகுதியின் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 


தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு துணைப் பிரதமர் சைட் அட்மிட் அவர்களின் வழியாக தீர்வு காண முனைவேன் என்றும் வருகை தந்திருந்த பேராளர் மத்தியில் உறுதி அளித்தார். 


அதேபோல் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தம் மேலும்  கவனம் செலுத்தி வருவதாகவும் திரு அரவிந்த் கூறினார். 


தொடர்ந்து தேசிய பிரதிநிதியாக ஐபிஎப் கட்சியின் பினாங்கு மாநில தலைவர் அவருடைய உரையில் பாகான் டத்தோ தொகுதி தலைவர் திரு அப்பாளசாமி அவர்கள் டான் ஸ்ரீ எம் ஜி பண்டிதனின் பாசறையில் வளர்ந்த ஒரு மூத்த தலைவர் என்பதையும் அவர் ஐபிஎப் கட்சிக்கும் பாகான் டத்தோ தொகுதி மக்களுக்கும் ஆற்றி வரும் சேவை அளப்பரியது என்று புகழாரம் சுட்டினார். 


ஐ பி எப் கட்சி பத்தோடு பதினோராவது கட்சி அல்ல ஐபிஎப் கட்சியின் போராட்டம் வரலாறு மிக நெடியது இன்றுள்ள புதிய தலைமுறைகளுக்கு ஐ பி எப் கட்சியின் போராட்டம் தெரிய வாய்ப்புகள் குறைவு எனக் கூறிய குமரேசன் அவர்கள் 90 ஆம் ஆண்டு காலங்களில் இந்த நாட்டிலே வாழக்கூடிய இந்திய சாமானிய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு தீப்பொறியை ஏற்றி வைத்த கட்சிதான் ஐபிஎப் அதன் அடிப்படையிலேயே1990 ஆண்டு நடந்த நாட்டின் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு.

அதன் வழியாகத்தான் சாமானியர்களும் அரசியலில் உயர் பதவிகளுக்கு வரலாம் என்ற வரலாறு உருவாகியது. 


ஐபிப் கட்சியின் தேசிய முன்னணிக்கும் தொடர்ந்து பாகான் டத்தோ தொகுதி வழங்கி வரும் ஆதரவுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 


கூட்டத்தில் தலைமை உரையாற்றிய தொகுதி தலைவர் திரு அப்பாளசாமி அவர்கள் ஐபிஎப் கட்சிக்கும் அதன் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் அவர்களுக்கும் ஐபிஎப் பாகான் டத்தோ தொகுதி என்றும் உறுதுணையாக இருக்கும் அதே வேளையில் வரக்கூடிய பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாகான் டத்தோ ஐபிஎப் தொகுதியின் தேர்தல் இயந்திரம் இப்பொழுதே தயார் நிலையில் இருப்பதாகப் பலத்த கரைவழிக்கிடையே கூறினார். 


இறுதியாக அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் தொகுதி மகளிர்களுடன் அணிச்சல் வெட்டி இரவு உணவும் பரிமாறப்பட்டது குறிப்பிடதக்கது. - Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment