Alaioli
சிவாலெனின் உட்பட மூவருக்கு ஹைக்கூ சுடரொளி விருது - உலக ஹைக்கூ மாநாட்டில் வழங்கப்பட்டது!!

புதுக்கோட்டை,மே20: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான சிவாலெனின் உட்பட மூவருக்கு புதுக்கோட்டையில் நடைபெற்ற 5வது உலக ஹைக்கூ மாநாட்டில் "ஹைக்கூ சுடரொளி" விருது வழங்கி  சிறப்பிக்கப்பட்டது.சிவாலெனினோடு நாட்டின் ஹைக்கூ முன்னோடியான எழுத்தாளர் ந.பச்சைபாலன், பேரா மாநிலத்தைச் சார்ந்த கவிஞர் மகேந்திரன் நவமணி ஆகியோரும் இம்மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்களாவர்.


மலேசியாவில் ஹைக்கூ கவிதைக்கான களத்தை விரிவுப்படுத்துவதோடு தொடர்ந்து ஹைக்கூ கவிதையில் பயணிக்கும் அம்மூவருக்கும் அனைத்துலக விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அம்மூவருக்கும் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், இனிய நந்தவனம் மாத இதழ் மற்றும்  தமிழ் ஹைக்கூ கவிதையாளர் இயக்கம் இணைந்து நடத்திய உலக ஹைக்கூ மாநாட்டில் அவ்விருது வழங்கப்பட்டது.


மிகவும் சிறப்பாகாவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இம்மாநாடுக்கு இந்தியாவின் ஹைக்கூ கவிஞர்களோடு மலேசியா,சிங்கப்பூர்,துபாய்,அந்தமான் என பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


விருது பெற்ற அம்மூவரும் இச்சிறப்பு மிகு மாநாட்டில் இரவை கிழிக்கும் ஓநாய்கள் (சிவாலெனின்) பாதி திறந்திருக்கும் கதவுகள் (ந.பச்சைபாலன்) மற்றும்  மழை நின்ற வீதி (மகேந்திரன் நவமணி) ஆகிய தங்களின் ஹைக்கூ நூல்களையும் வெளியீடு செய்து மலேசிய எழுத்துலகிற்கு மேலும் பெருமை சேர்த்தனர்.இவ்விருது குறித்தும் நூல் வெளியீடு குறித்தும் பேசிய சிவாலெனின் உலக ஹைக்கூ மாநாட்டில் கிடைக்கப் பெற்ற  இவ்விருதும் நூல் வெளியீடும் மலேசியாவில் ஹைக்கூ கவிதையின் களத்தை இன்னும் விரிவுப்படுத்த பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.


மேலும்,மலேசியாவில் அண்மையக்ன்காலமாய் ஹைக்கூ சார்ந்த தேடல் தீவிரமாய் விரிவடைந்து வருவதாகம் நம் நாட்டில் ஹைக்கூ படைப்புகள்  சிறந்த இலக்கை எட்டி உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்றும் தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம்  அண்மைய காலமாய் ஹைக்கூ பயிலரங்கம்,ஹைக்கூ சவால் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு நிலையில் இவ்வாண்டு பன்னாட்டு நிலையிலான ஹைக்கூ போட்டிக்கும் அச்சங்கம் தயாராகி வருகிறது என்பதையும் சிவாலெனின் தெரிவித்தார்.


அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு பன்னாட்டு 6வது ஹைக்கூ மாநாட்டை மலேசியாவில் ஏற்று நடத்தவும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆவணம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நடைபெற்ற 5வது உலக ஹைக்கூ மாநாட்டில் நாட்டின் ஹைக்கூ முன்னோடி எழுத்தாளர் ந.பச்சைபாலன் தலைமையில் சிவாலெனின்,கவிஞர் மகேந்திரன் நவமணி,திரு.சபா கணேசு, திருமதி.இராஜேஸ்வரி மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் குமாரி.சாந்தா காளியப்பன் ஆகியோர் பேராளர்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment