Alaioli
தீபகற்ப மலேசியாவின் ஜி7 சிகரங்களைத் தொட்ட இளம் மலையேறி இளைஞர்

By R.Ramani

கூலிம் மே21- கெடாவின் கூலிம் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவர் ஒருவர் தீபகற்ப மலேசியாவின் ஏழு உயரமான மலைகளான ஜி7 சிகரங்களை வெறும் ஏழு மாதங்களில் வெற்றிகரமாக ஏறி பெருமைக்குரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


கூலிம் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்பு செந்தமிழ் பயிலும் மாணவர் குபேரன் பூபாலன் தனது இளம் வயதிலேயே இந்த அசாதாரண சாதனையை நிகழ்த்தி தனது உடல் வலிமை போராடும் குணம் மற்றும் மலையேறும் நடவடிக்கைகளில் உள்ள ஆழ்ந்த ஆர்வத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்.


ஜி7 மலை சவாலானது அதன் சவால்மிக்க பாதைகள், அடர்ந்த காடுகள்,செங்குத்தான ஏற்றங்கள் மற்றும் அதிக உடல் மற்றும் மன வலிமை தேவைப்படும் கடும் பயணங்கள் காரணமாக மலேசியாவின் மிகவுக் கடினமான மலையேறும் சாதனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.


குபேரன் வெற்றிகரமாக ஏறி முடித்த ஏழுசிகரங்கள் தஹான் மலை( 2.187மீ), கோர்பு மலை( 2.183மீ), யோங் பெலார் மலை(2.181), காயோங் மலை(2.173), ச்சாமா மலை(2,171மீ), யோங் யாப் மலை (2,168), உலு செப்பாட் மலை(2,161மீ).


இயற்கையை ஆராய்வதையும் தன் குடும்பத்துடன் வெளிப்புறச் செயல்பாடுகாலில் ஈடுபடுவதையும் விரும்பிய அவரதுதாயிடமிருந்துதான். குபேரனுக்கு. மலையேறும் நடவடிக்கைகளில் ஆர்வம் தொடங்கியது.


ஒவ்வொரு வார இறுதியிலும் அவரது தாய் தனது பிள்ளைகளுக்கு உடல் மற்றும் மம வலிமையை வளர்த்துக்கொள்ளும் வேளையில்,இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குவதற்கு அவர்களை மலையேற்றப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்.


இந்த அனுபவத்தின் மூலம் பொறுமை,தைரியம்,ஒழுக்கம் மற்றும் எளிதில் கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றின் மதிப்பை குபேரன் கற்றுக்கொண்டார்.


கடினமான மற்றும் சோர்வூட்டும் பாதையை எதிர்கொண்ட போதிலும் அவர் வெற்றியை அடைவதில் உர்சாகமாகவும் கவனமாகவும் இருந்தார்.


இந்த மாபெரும் சாதனை சோழன் உலக சாதனைப் புத்தகம்,அமேசிங் மலேசியன் புக் ஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வதேச சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றின் அங்கீகாரத்தையும். பெற்றது.


அவை குபேரனின் வெற்றியை  இளைஞர்களிடையே தைரியம், துணிச்சல் விடாமுயற்சி மற்றும் சிறப்பின் சின்னம் என்று வர்னித்துள்ளன.


குபேரனின் வெற்றி இளைய தலைமுறையினரைத் தங்கள் கனவுகளை அடையத் தொடர்ந்து பாடுபடவும்,அசாதாரணமான வெற்றியை அடைவதில் தங்களைச் சாவல் விடத் துணியவும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.-Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment