Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், மே 25- செரி சீடிங் விவசாய நிலத்தில் சுயமாகப் பயிரிட்டு போதிய உற்பத்திப் பொருட்களை தேடி வாழ்வாதாரத்தை அதிகரித்து வரும் ஏழை இந்திய விவசாயிகள் எதிர் நோக்கி வரும் சில அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து அதற்கான உதவிகளை முன்னெடுத்து தாம் தொடர்ந்து வழங்கி வருவதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்து பாடுபட்டாலும் கிட்ட தட்ட பல மாதங்கள் வரை அதற்கான காலத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில், அவர்களின் உடனடித் தேவைகளையறிந்து சிரமத்தைப்போக்கி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து கை கொடுத்து உதவி வருவதாக அவர் கூறினார்.

அதன் அடிப்படையில், செரி சீடிங் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வரும் இந்திய குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையறிந்து தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாக உமா நந்தினி அலை ஒளியிடம் தெரிவித்தார்.

செரி சீடிங் கிராமத் தலைவர் மற்றும் விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவிக் கரமாக இருந்து வரும் நடவடிக்கைக் குழுவினர் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.-Alaiolinews


மக்கள் பிரச்சினைகள்
செரி சீடிங் இந்திய விவசாயிகளின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்படும்-. உமா நந்தனி தகவல்
சமூக நிகழ்வுகள்
சிரமத்தை எதிர்நோக்கும் வாழ்வாதாரம் குறைந்தோருக்கு மாநில அரசின் உதவிகள் முன்னெடுக்கப்படும்- பாப்பா ராய்டு
இளைஞர் முன்னேற்றம்
பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் திறமையை வெளிக்கொணர்ந்த டத்தோ சிவநேசன் சுழற்கிண்ணம்;
தேசிய செய்திகள்
Petronas beri jaminan minyak cukup sehingga Julai
கோவில் விழாக்கள்
சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல் : இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி
மக்கள் பிரச்சினைகள்
Lelaki cedera digigit buaya di Port Dickson
காவல்துறை செய்திகள்
Tumpas ‘Geng RT’, 12 lelaki dicekup bawah SOSMA
கட்சி செய்திகள்
PH tak mahu dipatuk ular dua kali - Setiausaha Agung DAP Anthony Loke