Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம். மே 21 - மனித வள மக்கள் நலப் பிரிவின் கண்காணிப்பில் செயல்படும் புரோகிராம் டிரான்ஸ் ஃபோர்மஸி பெர்னியாகா கெச்சில் என்றழைக்கப்படும் டேப்ஸ் எனும் சிறு தொழில் திட்டத்தில் 180 பேர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தகவல் தெரிவித்தார்.

இங்கு, ஷா ஆலம் செக் சன் 7 இல் அமைந்துள்ள பிகேஎன்எஸ் பிஷ் பொயிண்ட் கட்டடத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டு சிறு தொழில் வியாபாரம் குறித்த விளக்கம் அளித்த தோடு, நிகழ்ச்சியில் 3 ஆயிரம் ரிங்கிட்டும் குறைவான வருமானம் பெறுவோருக்கான விவரங்களை முன்னெடுத்து தெரிவித்ததாக அவர் கூறினார்.

மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் திட்டம் வாயிலாக புளூ பிரிண்ட் எனும் இந்த நடவடிக்கை வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதோடு வறுமை ஒழிப்பைக் குறைத்து சிறு தொழில் செய்வோர் நலம் பெறும் வகையில் அதன் செயலாக்கம் செம்மையாக அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டமாகும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தெரிவித்தார்.

சிறு தொழில் செய்வோர் சிலர் இந்த நிகழ்ச்சியில் அதற்கான உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டனர். மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.-Alaiolinews


உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!