Alaioli
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு

தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு

வீரமோகன் 

ஊத்தான் மெலிந்தாங், செப். 15 — மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில் பாரதி தமிழ்ப்பள்ளி மற்றும் சன்மார்க்க பாலர் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நாட்டுப்பற்றின் முக்கியத்துவம், நாட்டின் மீதான அன்பு மற்றும் கலைத்திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், வர்ணம் தீட்டும் கலையின் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.


மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் தலைவர் ஷர்வின் பழனிவேல் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.


சிறப்பு வருகையாளர்களாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி டத்தோ ஹாஜி கைருடின் தர்மிஜி, பாரதி தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ராஜகோபால், முன்னாள் ஆசிரியர் கணேசன் ஆறுமுகம் மற்றும் பழனிவேல் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்ப்பதுடன், அவர்களின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்தது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News