Alaioli
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

க.வீரமோகன்

ஊத்தான் மெலிந்தாங், செப். 14 — ஊத்தான் மெலிந்தாங் சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.


தேவஸ்தானத் தலைவர் கணேசன் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், தேவஸ்தானப் பொறுப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.


விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்று, விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News