Alaioli
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா

பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா

220 மாணவர்கள் பங்கேற்பு – 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டாற்றிய மூவருக்குச் சிறப்பு

க.வீரமோகன்

ஊத்தான் மெலிந்தாங், செப். 13 — ம.இ.கா. பாகான் டத்தோ தொகுதியின் ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவைத் தொகுதித் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் ராமலிங்கம் தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார். சிறப்பு வருகையாளராக டத்தோ டாக்டர் முரளிதரனும் கலந்து கொண்டார்.


இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான திருமதி தேவகி மேனன், 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழி, கவிதை மற்றும் தமிழ்த் தொண்டாற்றி வரும் டத்தோ சுப்பிரமணியம் ராமலிங்கம், டத்தோ டாக்டர் முரளிதரன் ஆகியோருக்குச் சிறப்பு செய்தார்.


தமிழ் மொழி வளர்ச்சிக்கும், திருமுறை ஓதும் பாரம்பரியத்தை மாணவர்களிடையே வளர்ப்பதற்கும் இவ்விழா முக்கியத்துவம் அளித்தது. இதில் பாகான் டத்தோ தமிழ் தெலுங்குப் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி மோகனா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், பாகான் டத்தோ மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 16 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் மொத்தம் 220 மாணவர்கள் இத்திருமுறை ஓதும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News