Alaioli
நீலாய், லாபு பிரிவு 4 இல் அமைந்துள்ள பழைய தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலப்பரப்பளவில் புதிய பள்ளி-அருள் குமார் தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்

நீலாய். மே 21-  நீலாய் சிற்றூரை ஒட்டியுள்ள லாபு தோட்டம் பிரிவில் 4 இல் அமைந்துள்ள பழைய தமிழ்ப் பள்ளிக்கு மாற்றாக நெகிரி மாநில அரசின் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலப் பரப்பளவில் புதிய பள்ளிக்கான கட்டடம் எழுப்பும் பணிகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் தகவல் தெரிவித்தார். 


தற்போது இவ்வட்டாரத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், பழம் பெரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான லாபு பிரிவு 4 தமிழ்ப் பள்ளிக்கான புதிய கட்டடம் எழுப்ப அதற்கான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார். 


அமைய விருக்கும் புதிய பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்று நீலாய் சட்ட மன்ற உறுப்பினருமான அருள் குமார் தெரிவித்தார்.


புதிய பள்ளிக்கான நிலப் பகுதியை பள்ளி நிர்வாகத்தினர் நெகிரி மாநில அரசின் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.-Alaiolinews

Leave a Comment
Trending News