Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கிள்ளான் மே 30 சிலாங்கூர் மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்படவும், அதைப் புதுப்பிக்கவும் அதே வேளையில் புதிய ஆலயங்கள் நிர்மாணிக்க வேண்டும் எனில் கிள்ளான் அரச நகர மன்றத்தின் அனுமதியும் நிலம் தொடர்பில் மாவட்ட நில இலாகா ஒப்புதலையும் நிர்வாகத்தினர் முறையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அதிக செலவில் ஆடம்பரமாக எழுப்பப்படும் வழிப்பாட்டுத் தலங்கள் கூட பின்னர் சரியான பராமரிப்பும் நிர்வாகத் திறனும் இல்லாத காரணத்தால் நிதி நெருக்கடியை எதிர் நோக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவங்கள் தமது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி அவர் பேசினார்.

கிள்ளான் அருள் மிகு ஸ்ரீ ஆதி சக்தி ராஜ காளியம்மன் ஆலய நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில் ஆலய வருடாந்திரத் திருவிழாவில் கலந்து கொண்டு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் மாலை பொன்னாடை மரியாதையையும் ஏற்றுக் கொண்ட டாக்டர் குணராஜ், ஆலயங்களை வழி நடத்தி வரும் நிர்வாகக் குழுவினருக்கு மேற்கண்ட ஆலோசனையை முன் வைத்தார். இந்தத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டதாக ஆலய நிர்வாகத்தினர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

TAMIL SCHOOL
இமைகள் மூடினாலும் திறமைகள் மூடாது: ஆறாம் அறிவின் ஆற்றலால் உலகையே அசத்தும் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம்
போக்குவரத்து செய்திகள்
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை
கோவில் விழாக்கள்
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது
மக்கள் பிரச்சினைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026புகையிலை ஒரு மெளன கொலையாளி!
மாநில செய்திகள்
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.
மாநில செய்திகள்
மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்பட வேண்டும்= டாக்டர் குணராஜ் வலியுறுத்து.
மாநில செய்திகள்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசின் புதிய மருத்துவமனை 2027 இல் கட்டப்படும்ந்திரி பெசார் அமிருடின்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்திய “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா"