Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோல சிலாங்கூர் மே 30. வீடுகளில் அடைத்து கொண்டு குவிந்து கிடக்கும் வீட்டுக்குப் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுதியுள்ள பொருட்களைச் சேகரித்து வைத்தால் அதை வாங்க வருவோரிடம் நல்ல விலையில் பேசி விற்க உரிய நடவடிக்கைகளை கோல சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம் தகவல் தெரிவித்தார்.

புக்கிட் மெலாவத்தி சட்ட மன்றத் தொகுதியில் வசித்து வரும் சில முதிய குடும்ப பெண்களும், தமது கருத்தை ஆதரித்து வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற பொருட்களை விற்பனைக்கு அனுப்பி அதன் மூலம் உரிய தொகையும் அவர்களிடமே வழங்கப் பட்டு வருவதாக அவர் கூறினார்.

முதுமை காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள், தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக தீபன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் வீடுகளில் அடைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடும் தூய்மையாக பொலிவுறும் என்று தீபன் சுப்ரமணியம் தமது கருத்தை முன் வைத்தார்.

TAMIL SCHOOL
இமைகள் மூடினாலும் திறமைகள் மூடாது: ஆறாம் அறிவின் ஆற்றலால் உலகையே அசத்தும் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம்
போக்குவரத்து செய்திகள்
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை
கோவில் விழாக்கள்
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது
மக்கள் பிரச்சினைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026புகையிலை ஒரு மெளன கொலையாளி!
மாநில செய்திகள்
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.
மாநில செய்திகள்
மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்பட வேண்டும்= டாக்டர் குணராஜ் வலியுறுத்து.
மாநில செய்திகள்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசின் புதிய மருத்துவமனை 2027 இல் கட்டப்படும்ந்திரி பெசார் அமிருடின்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்திய “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா"