Alaioli
பினாங்கு.தஞ்சோங் பூங்கா மே 30-நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பினாங்கு, ஜாலன் ஹோல்டட்ஹோம், தஞ்சோங் பூங்கா அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.

மலேசியத் திருநாட்டில் முக்கியமான குருமார்கள் சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து மிகவும் நேர்த்தியாக ஆலய கும்பாபிஷேக விழாவினை காலை 7: 10 மணி முதல் 8.10 மணி வரை நடத்தினார்கள்.இந்த ஆலயம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. நான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆலயத்திற்குத் தலைவராக இருந்து வருகின்றேன். எனக்குத் தெரிந்து இன்று நடைபெற்றது ஆலயத்தின் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழாவாகும் என்றார் ஆலய தலைவர் ஆர். முனியாண்டி.

இன்று பினாங்கு சுற்று வட்டாரத்தில், 15 ஆலயங்களில் இருந்து ஆலயத் தலைவர்கள் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மாளுக்கு சீர் கொண்டு வந்தார்கள். தண்ணீர் மலை முருகன் ஆலயம், ஸ்ரீ விநாயகர் ஆலயம், பத்து பிரிங்கி, தஞ்சை பூங்கா ஆலயங்களில் இருந்தும் சீர் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலயச் சுற்றுப்புறத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வழிபாட்டிற்கு இந்த மாரியம்மன் ஆலயம் தான் அருள் பாலித்து வருகிறது. ஆலய திருக்குட நன்னீராட்டு சடங்குகளுக்குப் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது என ஆலயத் தலைவர் மேலும் கூறினார். பழமையான இந்த ஆலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதால் யுனெஸ்கோ விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.