Alaioli
ஆர்.ரமணி
பிறை ஜூன் 7-மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் பினாங்கு மாநில கிளையின் 4வது பொதுக்கூட்டம் பிறை, சன் சேகா தங்கும் விடுதியில் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரவையின் பினாங்கு மாநில தலைவர் வேலாயுதம் சன்னாசி தலைமை ஏற்றதுடன், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னால் மாணவர் பேரவையின் தேசியத் தலைவர் குமரன் மாரிமுத்து,பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் அவர்களின் இந்தியச் சிறப்பு அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் சக்திவேல் அறிவானந்தம்,டத்தோ சண்முகநாதன்,டத்தோ இராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்கு மிக முக்கியமானது என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமையுரைபற்றிய வேலாயுதம் சன்னாசி, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு தொடர்ந்து அரணாக இருந்து பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகப் பாராட்டுத் தெரிவித்தார்.தேசியத் தலைவர் குமரன் மாரிமுத்து தனது உரையில், தமிழ்ப்பள்ளிகள் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவற்றைச் சமாளிக்க தொண்டூழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பு அவசியம் என்றும் கூறினார்.

மேலும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.கணித மேதை இராமனுஜம் பெயரில் கணித போட்டி பயிற்சி மற்றும் கணினி போட்டித் திட்டம் ஒன்றாகும். அடுத்ததாக அறிவியல் மற்றும் தமிழ்மொழி கல்வி மேம்பாட்டுத் திட்டங்களும் அமல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியை பினாங்கு மாநில வீடமைப்பு சுற்றுச்சூழல் ஆச்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ்சோமு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழித் திறனை மேம்படுத்துவதற்கும், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் பயிற்சி வழங்குவதற்குமான திட்டங்களும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.\"இனம் வாழ வேண்டுமெனில் மொழியும் சமயமும் வாழ வேண்டும். தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாப்பது நமது அடையாளத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்குச் சமம்\" என அவர் வலியுறுத்தினார்.

பினாங்கு மாநிலம் தமிழ்ப்பள்ளி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கின்றது என்றும், அங்குள்ள சமூகத் தலைவர்களின் அர்ப்பணிப்பான சேவை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டி டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமுவுக்கு \"தமிழ்ப்பள்ளிகளின் அரண்\" என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரவை சார்பில் ஏற்று நடத்திய கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன்,எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதுடன் பிறை சட்டமன்றத்தின் சார்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை டத்தோ ஶ்ரீ சந்தராஜூ சோமு எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
நிகழ்வின் நிறைவில், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இருந்தாலும் இந்தியச் சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாட்டில் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும் உறுதியும் வலியுறுத்தப்பட்டது.




மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.