Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் ஜூன் 8. சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான, அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு( ஏகேஎஸ்இஎஸ் ) எனும் பதிவுத் திட்டத்தின் வாயிலாக தொகுதியில் வசித்து வரும் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் முறையாக சேகரிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பின்னர் தேவையான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களது நலன் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில், இங்கு பந்திங் நகரை யொட்டி அமைந்துள்ள சுங்கை மங்கீஸ் சமூக மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அரசின் உதவித் திட்டங்கள் தொடர்பில் நடைபெற்ற பொது மக்களுக்கான பதிவு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கொண்ட தகவலை வெளியிட்டார்.

புரோகிராம் ஏக்செஸ் பதிவுத் திட்டத்தின் கீழ் தொகுதியில் வசித்து வரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் திட்டம் பின்னர் நன்மை பயக்கும் என்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அவசியம் பதிவு நடவடிக்கையில் கலந்து கொள்ளும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு வேண்டுகோள் விடுத்தார். குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள். அதற்கான ஆவணங்கள் நகல்கள் அலை பேசி தொடர்பு எண்கள் என பல விவரங்களை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து பெற்று அதிகாரிகள் பதிவு நடவடிக்கையில் இறங்கினர் என்று அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசில் பணியாற்றி வரும் அதிகாரிகள், பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் இளையராஜா பழனிச்சாமி, பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.