Alaioli
ஜொகூர் பாரு ஜூன் 8- ஜொகூர் பாருவில் வேலைக்காக வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் கடந்த மே 18ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவச் செலவாக RM8,547 செலுத்த முடியாததால் அவரது உடல் 21 நாட்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து, ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி மற்றும் பல நல்லுள்ளங்களின் தலையீட்டால் மருத்துவக் கட்டணம் RM4,000 ஆக குறைக்கப்பட்டது. சுல்தானா ரொஹாயா அறக்கட்டளை மற்றும் ரவீன் குமார் சார்பில் தலா RM2,000 வழங்கப்பட்டு கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டது.
மேலும், இறுதிச்சடங்கு செலவுகளுக்காக நண்பர்கள் RM3,000-க்கும் மேல் நிதி திரட்டி உதவினர். இதையடுத்து, 21 நாட்களாக பிணவறையில் இருந்த பெண்ணின் உடல் இன்று இந்து சமய முறையின்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இந்த சம்பவம், வெளிநாடுகளில் வேலைக்காக வருபவர்கள் சரியான ஆவணங்கள், மருத்துவ பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை மீண்டும் உணர்த்துவதாகும்.
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.