Alaioli
மரபு கவிதைகளே இலக்கியத்தின் வேராகக் கருதப்படுகின்றன. யாப்பு விகுதிகள், ஓசை நயங்கள், கவிதையில் சீர் சிதையாமல் வரையறுத்து கற்பனை ஆற்றலுடன் இயற்றப்படுவதே மரபு கவிதைகள் ஆகும். அந்த இலக்கியப் படைப்புக்கு நேர்மாந்து வாழ வைக்க உப்சி எனப்படும் சுலுதான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மதியுரைஞர் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நல்லார்க்கினியன் கவிதைப்போட்டியை நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வருடம் மாணவர், இளையோர், பொது என மூன்று பிரிவுகளாக எட்டாம் முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியின் பரிசளிப்பு விழா வருகின்ற ஜூன் 13-ஆம் திகதி சனிக்கிழமை அன்று உப்சி தஞ்சோங் மாலீம் பேராக்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மலேசியாவில் தமிழ் இலக்கியங்களுக்கு உயிரூட்டும் வகையில் தொடர்ந்து பல சிறப்பு படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் 5 கவிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் அங்கமும் இடம்பெறும் என நிகழ்ச்சியின் இயக்குநர் பவித்ராதேவி த/பெ ஆதி நாராயணன் தெரிவித்தார்.
Panggung percubaan UPSI-இல் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் தொடக்கி வைப்பார்.

எனவே, பல்கலைக்கழக மாணவர்களையும் பேராக் மாநில ஆசிரியர்களையும் மலேசிய கவிஞர்களையும் அழைத்து வெற்றிக்கு ஒரு விழாவாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களை அன்புடன் வரவேற்கிறார்கள்.



மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.