Alaioli
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை

எஸ்.எஸ்.மணிமாறன். 

கோலாலம்பூர். மே 30.  இங்கு, கோலாலம்பூர் சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு மிக அருகில் எதிர் பாராமல் நடந்த தடம் மாறிச் சென்ற எல்ஆர் டி ரயில் வண்டி பயணம் இறுதியில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து சென்ற அதிர்ச்சி தரும் சம்பவத்தை எல் ஆர்டி ரயில் நிறுவன அதிகாரிகள் மிகச் சாதாரணமாக அலட்சியமாகக் கருதி விடக்கூடாது என்று போக்கு வரத்து அமைச்சர் அந்தோணி லோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


அம்பாங் செரி பெட்டாலிங் இடைப்பட்ட தடத்தில் பயணித்து வரும் எல் ஆர் டி ரயில் வண்டி  25 பயணிகளை ஏற்றிப் புறப்பட்ட காலை நேரத்தில்  சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தை விட்டு விலகி நின்ற இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட கருத்தைப் பதிவு செய்தார். 


பயணிகளைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய தலையாயப் பொறுப்பு எல் ஆர் டி ரயில் நிறுவனத்திற்கு இருப்பதால், இனி வரும் காலங்களில் பயணப் போக்குவரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நேரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தோணி லோக் அறிவுறுத்தினார். சம்பவத்தின் போது எல் ஆர் டி ரயில் வண்டியில் இருந்து பாதுகாப்புடன் வெளியே கொண்டு வரப்பட்ட 25 பயணிகளை பின்னர் நிலையத்தின் அதிகாரிகள் வேறொரு வாகனங்களில் வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Comment
Trending News