Alaioli
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசின் புதிய மருத்துவமனை 2027 இல் கட்டப்படும்ந்திரி பெசார் அமிருடின்.

 எஸ்.எஸ்.மணிமாறன் 

கோம்பாக் மே 30 -     வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பெட்டாலிங் ஜெயாவில் மக்கள் தொகை 20 இலட்சமாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2027இல் அரசின் புதிய மருத்துவமனை 500 படுக்கைகளுடன் கட்டப்பட மாநில அரசு செயலகம் முடிவெடுத்துள்ளதாக மந்திரி.

.

பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த காலங்களில் தலைநகர் பெரிய மருத்துவமனை, அதையடுத்து உருவாக்கம் கண்ட அம்பாங் அரசு மருத்துவமனை, ஷா ஆலம் அரசு மருத்துவமனை மற்றும் யூனிவர்சிட்டி மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளை இதுகாறும் பயன்படுத்தி வந்துள்ள பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு இது ஒரு இனிப்பான செ-ய்தியாக அமைவதோடு,  தாமான் மேடான் வட்டாரத்தில் அரசின் புதிய மருத்துவமனை அமையவிருப்பதாக அவர் கூறினார். 


இங்கு, கோம்பாக் தொகுதி சட்டமன்ற வாக்காளர்களை நேரில் சந்தித்து அய்டில் அட்ஹா பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மந்திரி பெசார் அமிருடின் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


வளர்ச்சியை நோக்கிடும் பெட்டாலிங் ஜெயாவில் மக்களின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் மனிதரின் அன்றாட சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மாநில முதல்வர் அமிருடின் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News