Alaioli
புத்தர் பிறந்த விசாகத் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

எஸ்.எஸ்.மணிமாறன். 

ஷா ஆலம். மே 31   ஞாயிறன்று (31.5.2026) மலரும் புத்தரின் புனித பிறந்த தினமாம் விசாகத் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 


சமரசம், சமாதானம், அமைதி, ஒருமைப்பாடு,மனித நேயம் நிறைந்த கொள்கைகளைத் தாங்கி உலக மக்கள் நலனுக்காகப் பரப்பிய தோடு,  போதி மரத்தடியில் அமர்ந்து யோகம் பெற்ற தியாகச் சீலர் புத்தரின் போதனைகளைக் கடைப் பிடித்து நல்வழியில் பயணித்து மனுக் குலத்திற்கு அரணாக செயல்படும் நாட்டில் ஆங்காங்கே உள்ள புத்தப் பிக்குகளுக்கும், புத்தரின் நற் போதனைகளைக் கடைப் பிடித்து உலக மாந்தர் நலனுக்காக அதைச் சேவையென தொண்டாற்றி வரும் அனைவருக்கும் இந்த இனிய சுப வேளையில், புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி என்ற வேத மந்திரங்களை முன்னெடுத்து தமது இதயம் கனிந்த விசாகத் திருநாள் நல்வாழ்த்துகளை பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு இதன்வழி பகிர்ந்து கொண்டார்.

Leave a Comment
Trending News