Alaioli
செபராங் ஜெயா, மே 30 – கெடா மாநிலம் கூலிமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காமாச்சி சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் மொத்தம் ரிம 3,4500.00 நிதி திரட்டப்பட்டது.இந்த நிகழ்ச்சி செபராங் ஜெயாவில் அமைந்துள்ள தெ லெயிட் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. காமாச்சி சமூக நல இயக்கத்தின் தலைவர் டாக்டர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு, காமாச்சி சமூக நல இயக்கத்தின் சேவைகளைப் பாராட்டியதுடன், தனது ஆதரவாக ரிம 30,000 நிதி வழங்கினார்.

அதேவேளை, தெ லெயிட் தங்கும் விடுதியின் நிறுவனர் டான் ஶ்ரீ இராமேஷ் தனது நிறுவனத்தின் சார்பில் ரிம 50,000நிதியுதவியை வழங்கினார். மேலும், கமாலியா பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான டத்தோ மரியதாஸ் கோபால் ரிம 15,000 வழங்கினார்.
தொழிலதிபர்களான டத்தோ தேவேந்திரன் மற்றும் அட்னான் அப்துல்லா ஆகியோர் தலா ரிம 10,000 வழங்கி இந்நிதி திரட்டலுக்கு பங்களித்தனர்.இதேவேளை, அலை ஒளி சமூக ஊடகம் சார்பில் ரிம 1,000 நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் காப்பகத்திற்காக புதிய குடியிருப்பு வீடு வாங்கும் முயற்சிக்கு அலை ஒளி ஊடகத்தின் இயக்குநர்களான ஆர். ரமணி மற்றும் செ. குணாளன் ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு, காமாச்சி குழந்தைகள் காப்பகத்திற்காக ஐந்தாவது குடியிருப்பு வீட்டை வாங்கும் நோக்கில் இந்த தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.“கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியும், பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவும் சமூகத்தில் மேலும் வளர வேண்டும். குழந்தைகள் காப்பகத்தை சிறப்பாக நடத்தி வரும் டாக்டர் கருணாநிதியின் அர்ப்பணிப்பான சேவைக்கு வழங்கப்படும் இந்த ஆதரவு, நன்கொடையாளர்களின் கருணைமிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, இந்த நிதி திரட்டல் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காமாச்சி சமூக நல இயக்கத்தின் தலைவர் டாக்டர் கருணாநிதி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!