Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கிள்ளான் ஜூன் 2. ஆழமான சமய நெறி கோட்பாடுகள், மாணவர்கள் இளையோர் மத்தியில் ஆன்மிகப் போதனைகள் தழைக்கும் இடமாக வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைத்து நேர்த்தியாக வழி நடத்திச் செல்வது ஆலய நிர்வாகத்தினரின் அன்றாடப் பணியாகக் கொள்ளல் சிறப்பு என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வலியுறுத்தினார்.

இளையோர் மத்தியில் நிகழும் தகாத போதைப் பொருள் உட் கொள்ளும் பழக்க வழக்கங்கள், பள்ளியில் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் பகடி வதைகள் கருத்து மோதல் சம்பவங்கள் யாவும் முற்றாக த் துடைத்தொழிக்க வகை செய்யும் வகையில் கை கொடுத்து உதவிடும் ஆன்மிகப் போதனைகள், நன்னெறிக் கல்விகள் நிச்சயம் இதை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்று அவர் கூறினார். இங்கு, கிள்ளான் கம்போங் ஜாவா நான்காவது மைலில் வீற்றிருக்கும் பழைமையான ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திரத் திருவிழாவில் நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.
சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் மாலை, பொன்னாடை அணிவித்து காளாஞ்சி வழங்கி கௌரவப்படுத்தினர். ஆலய வருடாந்திரத் திருவிழாவில் நடைபெற்ற மகேஸ்வரப் பூஜையைத் தொடர்ந்து உள்ளூர் வெளியூர் பக்தர்கள் என் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் அன்னதான உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor
மாநில செய்திகள்
காலத்தை வென்று நிலைத்த குரல் கண்ணதாசன் – தமிழ் உலகின் அழியாத சக்தி!
மாநில செய்திகள்
ஜுன் முதல் தேதி பேருந்து சேவை தொடக்கம்
மாநில செய்திகள்
பாரதி தமிழ் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக சங்கர் ராஜகோபால் தலைமை ஏற்றார்.
மாநில செய்திகள்
வளரும் இளம் தலைமுறையினரை கால் பந்தாட்டத் துறையில் கால் பதிக்க வகை செய்தல் வேண்டும்= பாப்பா ராய்டு ஆலோசனை.
மாநில செய்திகள்
சமய நெறி ஆன்மிகக் கல்விப் போதனைகள் தழைக்கும் இடமாக வழிபாட்டுத் தலங்கள் அமைதல் வேண்டும்= பாப்பா ராய்டு வலியுறுத்து
மாநில செய்திகள்
ஜொகூர் மாநில அரசாங்கத்தின் மக்களுக்கான நலத்திட்டங்கள் – விரிவான கட்டுரை.அலை ஒளி சிறப்பு தொகுப்பு
மாநில செய்திகள்
ஜொகூர் மாநில அரசின் மனிதநேய சேவையைப் பாராட்டும் வகையில் கட்டுரையாக மாற்றிய வடிவம்: