Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் ஜூன் 2 நம்மைச் சுற்றி நடமாடும் மக்கள் குடியிருப்பு ப்பகுதியில் வசித்து வரும் இளம் தலைமுறையினரை புட்சால் எனும் கால்பந்தாட்டத் துறையில் கால் பதிக்க அதற்கான முறையான பயிற்சிகளை வழங்கி கால் பதிக்க வகை செய்தல் வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் ஆலோசனை வழங்கினார்.

கம்போங் சுங்கை மங்கீஸ் கிராமத் தலைவர் தோக் அனுவார்அனி இக்ராம் தலைமையில் தாமான் பெரியாங் குடியிருப்புப் பகுதியில் 12 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளையோரை புட் சால் துறையில் ஈடுபடச் செய்து நாட்டின் தலை சிறந்த விளையாட்டாளர்களாகத் திகழ அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் துணிச்சலும் தந்து வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்க அயராமல் செய்து வரும் சேவையை தாம் வெகுவாகப் பாராட்டுவதாக அவர் கூறினார்.

இங்கு, தாமான் பெரியாங் மைதானத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இளம் கால் பந்து விளையாட்டு வீரர்களுடன் அளவாளவிய பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களான நடேசன் சுப்ரமணி, இளையராஜா பழனிச்சாமி, பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை, பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.