Alaioli
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் அனைத்து 36 சட்டமன்ற த் தொகுதிகளிலும் போட்டியிடும்= அமினுடின் ஹரூண் அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்  

சிரம்பான்.ஜூன்  7  வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொருத்தமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிடும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


இதன் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கு அமானாவும் டிஏபியும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில், பி.கே.ஆர் தலைமைத்துவமும் இந்த முடிவுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதாக அமினுடின் ஹரூண் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News