Alaioli
குருமு அகாடமி மாணவர்கள் சுபாஷினி, அகிலன் சிறப்பிப்பு

சுங்கை பட்டாணி, செப். 12 —கெடா மாநில மஇகா பேராளர் மாநாட்டில், அண்மையில் நடைபெற்ற சுக்மா மலேசியா விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த குருமு முவா தாய் அகாடமி மாணவர்களான சுபாஷினி மற்றும் அகிலன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா நாயுடு ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு பயணத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அண்மையில் நடைபெற்ற சுக்மா மலேசியா போட்டியில் கெடா மாநிலத்தின் சார்பில் குருமு முவா தாய் அகாடமி மூலம் களமிறங்கிய சுபாஷினி தங்கப் பதக்கத்தையும், அகிலன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

குருமு முவா தாய் அகாடமியின் பயிற்சியாளர் மாஸ்டர் பிரகாஷ் நாயுடுவின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

அவர்களின் தொடர் வெற்றிகள் கெடா மாநிலத்திற்கும், மலேசிய இந்தியச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்து வருவதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Post Image

Leave a Comment
Trending News