Alaioli
பினாந்தி ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக, ரத ஊர்வலம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரதம், சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பளித்தது.
6 ஜோடி காளை மாடுகளுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ரதம், பக்தர்கள் பக்தி உணர்வுடன் கலந்து கொண்ட நிலையில், அமைதியாகவும் இனிமையாகவும் ஊர்வலமாக நகர்ந்தது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டதாக ஆலய செயலாளர் திரு. பாலன் நம்பியார் தெரிவித்தார்.
ஊர்வலத்தின் ஓர் அங்கமாக, அர கூட பகுதியில் அமைந்துள்ள ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை மையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டியின் தலைமையில், ஆலய ரதத்திற்கு சிறப்பு அரச்சனை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரகாட்டம் பாரம்பரிய முறையில் இடம் பெற்றதோடு, நாதஸ்வர இசையின் மங்கள ஒலி முழங்கியதை குறிப்பிட வேண்டியது முக்கியம்.
இதையடுத்து, ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி, “எங்கள் நிறுவனம் பல வீடமைப்பு திட்டங்களில் பணியாற்றி வருகிறதுடன், சலுகையான விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு பக்தி மற்றும் பாரம்பரியத்தின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் அமைந்தது.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan