Alaioli
சத்யா பிரான்சிஸ்
பினாங்கு, ஜார்ஜ் டவுன் மே 9 - அன்னையர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் புடவை அணிவகுப்பு நடைப் பயணத்தில் நூற்றுக்கணக்கானத் தாய்மார்களும் பெண்களும் பங்கு கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பினாங்கு கெபுன் பூங்கா இளைஞர் வளாகத்தில் ஆரம்பமான சிறப்புமிகு விழாவை பினாங்கு இந்திய சங்கத்தின் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுத் தலைவருமான டத்தின் புவனேஸ்வரி ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாய்மார்களோடு இளம் பெண்களும் என 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தையும் பாரம்பரிய பண்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.
பினாங்கு பெண்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் ஓங் பெங் லெங், பினாங்கு முதலமைச்சர் அலுவலகத்தின் பிரதிநிதி அமுதா கிருஷ்ணன், ராம் கர்பால் சிங் பிரதிநிதி டி. விஸ்வநாதன், நியூட்ரி ஆர்ட் குளோபல் சொல்யூஷன் இயக்குனர் ரூபாலி தொங்கிண்மணி, பினாங்கு இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். சோமசுந்தரம், டாக்டர் புனிதாவரி, டத்தோஸ்ரீ செல்வகுமார் உட்பட ஏராளமானப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதன்முறையாக சாரி அணிந்து நடை பயணம் இந்தியர் சங்கத்தின் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம், சேலை அணியும் பாரம்பரியம் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் பினாங்கு இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைக்குமார்.
"எப்போது கணவர் பிள்ளைகள் என குடும்பத்தோடு இருக்கும் எனக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டதின் வழியாக பல பெண்களைச் சந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பும் மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டும் சம்பவமாக இருந்தது" என்றார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஜிதா.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஹென்றிகோ நிறுவனத்தின் சார்பில் பரிசு பைகளும், ஜெயா கேட்டரிங் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. இறுதியில் அதிர்ஷ்டக் குலுக்கு நிகழ்வோடு நிகழ்ச்சி முற்று பெற்றது.- Alaiolinews


குற்றச்சம்பவங்கள்
MPV mewah lari operasi JPJ, ada 20 saman AES
கட்சி செய்திகள்
Krisis Perlis: Undi tidak percaya terhadap MB tak perlu tunggu Sidang DUN Perlis - Sanusi
கட்சி செய்திகள்
Hanya 3 AJK PKR Cabang Shah Alam keluar parti
TAMIL SCHOOL
மலாக்கா மாநிலத்தில் தேசிய நிலையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ' சதுரங்கச் சாணாக்கியன் ' விருது பெற்றது
இயற்கை பேரிடர்கள்
Bangunan runtuh: Seorang rakyat Malaysia meninggal dunia di Filipina
தேசிய செய்திகள்
Kerajaan jimat subsidi lebih RM4.22 juta, inisiatif bekerja dari rumah
தேசிய செய்திகள்
Ketua ‘Geng Rames’ tumpas ketika menuju ke India - Polis
இளைஞர் முன்னேற்றம்
சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறும் கபடியில் இந்திய கபடி வீரர்கள் சாதனைப் படைப்பர்= பாப்பா ராய்டு நம்பிக்கை