Alaioli
மலாக்கா மாநிலத்தில் தேசிய நிலையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ' சதுரங்கச் சாணாக்கியன் ' விருது பெற்றது

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங்,  மே 26 - அண்மையில், மலாக்கா மாநிலத்தில் உள்ள குபு தமிழ்ப் பள்ளி மண்டபத்தில், தேசிய நிலையிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே நடை பெற்ற சதுரங்க ப் போட்டியில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளியின் மாணவச் செல்வங்களான 10 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட படிநிலை 2 பெண்கள் பிரிவில் சதுரங்க ப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், திறமையாக விளையாடி, \' சதுரங்கச் சாணாக்கியன்\' எனும் மாபெரும் விருதினைக் கைப்பற்றி பள்ளிக்கும் சக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று பள்ளித் தலைமையாசிரியர் இராமசாமி நடேசன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


இந்த வெற்றிக்கு வித்திட்ட ஆசிரியரும் பயிற்றுநருமான திருமதி க.சுபத்திரா, வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் சுதாகர் முனியாண்டி, அதே வேளையில் போக்குவரத்து மற்றும் உணவு உபசரிப்பை நேர்த்தியாக ஏற்றுக் கொண்ட பெற்றோர்களுக்கும் தமது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் அலை ஒளியிடம் கூறினார்.


வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி அடுத்த தடத்தில் கால் பதித்து மேலும்  ஒரு வெற்றியை அடைய அதன் உயர்வை எட்டிப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமையாசிரியர் இராமசாமி தமது கருத்தை முன் வைத்தார்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment