Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
தஞ்சோங் சிப்பாட் - வரும் ஆகஸ்ட் 2026 இல் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஏற்று நடத்தவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றுள்ள கபடி போட்டி விளையாட்டுகளில் பங்கேற்க விருக்கும் இந்திய கபடி வீரர்கள் போட்டிகளில் சாதனைப் படைப்பர் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்கு, தஞ்சோங் சிப்பாட்டில் அமைந்துள்ள கொம்ளக்ஸ் முகிபா அரங்கில் கபடி 3 ஸ்டார் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற விளையாட்டுகளை நேரில் பார்வையிட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி அவர்களைப் பாராட்டிய அவர் மேற்கண்ட கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கபடி விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப் பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.-Alaiolinews


உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!