Alaioli
சிவாலெனின்
ஈப்போ,மே12- அன்னையர் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும்,அன்னையர்களை அன்பு மிகுதியால் கொண்டாடும் விதமாகவும் சமூகச் சிந்தனையாளர் திரு.பெ.பாலையா ஏற்பாட்டில் ஈப்போவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈப்போ இந்தியச் சமூக நல கலை கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு பேரா கிந்தா வட்டார சமூக நல,விளையாட்டு துறை மற்றும் கலை கலாச்சார பண்பாட்டு இயக்கமும் இணைந்து வழங்கிடும் இந்த அன்னையர் தின கொண்டாட்டத்தில் \"உறவுகள்\" சமூக மேடை நாடகமும் அரங்கேறும் எனவும் பாலையா தெரிவித்தார்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சி வருகின்ற 16.05.2026,சனிக்கிழமை மாலை மணி 4.00 தொடங்கி ஜாலான் தன்பூனில் அமைந்துள்ள பேரா மாநில \"kompleks Kebudayaan Dan Kesenian Negara\" வில் நடைபெறும்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக இவ்வியக்கம் அன்னையர் தினம் மற்றும் கலை, கலாச்சார் பண்பாட்டு மேடை நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் இவ்வாண்டு 13வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் 30 அன்னையர்களுக்கு "சிறந்த அன்னையர்" விருது வழங்கி கௌரவிக்கப்படவிருப்பதாகவும் விவரித்த பாலையா மாநில மகளிர்,குடும்ப மேம்பாடு,சமூக துறை மற்றும் தொழில்துறை மேம்பாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஷல்ஃபியா முகமாட் சிறப்பு வருகையும் புரியவிருக்கிறார் என்றார்.
அதுமட்டுமின்றி,
தொடர்ந்து அன்றைய மாலை மணி 6.30க்கு மேல்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில்
அதன் நிர்வாக இயக்குனர்,
டான் ஸ்ரீ கே ஆர் சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் செயலாளர்,
‘முத்தமிழ் சேவகன்’
டத்தோ பா. சகாதேவன் அவர்கள் தலைமையில்,

திரு. பூச்சி இரவி அவர்கள் இயகத்தில், மகரம் அமைப்பின் தலவைரும் தே.நி.நி.கூ சங்கத்தின் டான் ஸ்ரீ கே ஆர் சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் நிர்வாகச்செயலாளதுமான திரு. கரு. பன்னீர் செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில்..

"உறவுகள" எனும் சமுக மேடை நாடகம் நடைப்பெறும் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்ட பாலையா பொது மக்கள்,சமக ஆர்வலர்கள் மற்றும் பொது இயக்கத்தினர் திரளாக கலந்து ஆதரவு வழங்குமாறும் கேட்டு கொண்டார்.-Alaiolinews

தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.