Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன
பந்திங் மே 13 - பந்திங் மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வரும் 2027 இல் 500 மில்லியன் ரிங்கிட் கட்டுமானச் செலவில் கூடுதலாக புதிய வார்டுகள் நிர்மாணிக்கப்படும் என்று பந்திங் மருத்துவமனை இயக்குநர் புவான் மலிண்டாவதி முகமட் ஃபட்ஸில் தெரிவித்தார்.
1970 களில் கட்டப் பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பந்திங் மருத்துவமனையில் , நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இடப் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சின் வழி காட்டலில் புதிய கட்டிட நிர்மாணிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

நேற்று, தாதியர் தினத்தை வரவேற்கும் வகையில் அனைவருக்கும் வாழ்த்துகள் வழங்கியதோடு காலையில் உபசரிப்புடன் பந்திங் மருத்துவமனை வருகையாளர்களுடன் இணைந்து நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் மலிண்டாவதி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இவ்வட்டாரத்தில் பழைமையான மருத்துவமனையாக விளங்கி வரும் பந்திங் மருத்துவமனை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை தாம் ஏற்பாடு செய்திருந்ததாக டாக்டர் மலிண்டாவதி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பந்திங் மருத்துவமனை வருகையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள லாவ் கோக் ஹூவா, மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் இன்னும் சிலரும் இந்தக் கூட்டத்தில் நோயாளிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளை முன் வைத்தனர்.-Alaiolinews


உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!