Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
சுங்கை பூலோ,மே 13- இன்று காலையில், எப்பிங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், நடைபெற்ற செந்தமிழ் விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஐ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விழாவில் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளி கொணர்ந்து 5 ஆவது முறையாக ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளியின் சுழல் கிண்ணத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டதாகப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்மாமணி புஷ்பராணி கிருஷ்ணன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி சுகுணா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் இம்முறை விழா நடத்துநர்களாக ஏற்று நடத்திய செந்தமிழ் விழாவில் தமது பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளிலும் முதல் நிலையில் வெற்றி வாகை சூடி பரிசும் பாராட்டும் பெற்றதாக தலைமையாசிரியர் புஷ்பராணி கூறினார்.

பெட்டாலிங் உத்தாமா மாவட்ட ரீதியில் செயல்படும் 5 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தலா 10 மாணவர்கள் கலந்து கொண்ட செந்தமிழ் விழாவை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா பாலர் பள்ளி தமிழ்ப் பள்ளிகளின் உதவி இயக்குநர் மணி சேகர் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்து, மாணவர்கள் திறனை வெளி கொணர்ந்து வெற்றி வாகைச் சூடி வர வேண்டும் என்று வாழ்த்துரையில் குறிப்பிட்டார் .
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் தமிழரசு, வட்டார த் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் செந்தமிழ் விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் படைப்புகளைப் பாராட்டி கை தட்டி வரவேற்றனர்.

தமிழ் வாழ்த்து, பாரம்பரிய பரத நாட்டியத்துடன் தொடங்கப்பட்ட செந்தமிழ் விழாவில் ஆசிரியர்களின் நேர்த்தியான கண்காணிப்புடன் விழா நிறைவை எட்டியது.-Alaiolinews


குற்றச்சம்பவங்கள்
MPV mewah lari operasi JPJ, ada 20 saman AES
கட்சி செய்திகள்
Krisis Perlis: Undi tidak percaya terhadap MB tak perlu tunggu Sidang DUN Perlis - Sanusi
கட்சி செய்திகள்
Hanya 3 AJK PKR Cabang Shah Alam keluar parti
TAMIL SCHOOL
மலாக்கா மாநிலத்தில் தேசிய நிலையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ' சதுரங்கச் சாணாக்கியன் ' விருது பெற்றது
இயற்கை பேரிடர்கள்
Bangunan runtuh: Seorang rakyat Malaysia meninggal dunia di Filipina
தேசிய செய்திகள்
Kerajaan jimat subsidi lebih RM4.22 juta, inisiatif bekerja dari rumah
தேசிய செய்திகள்
Ketua ‘Geng Rames’ tumpas ketika menuju ke India - Polis
இளைஞர் முன்னேற்றம்
சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறும் கபடியில் இந்திய கபடி வீரர்கள் சாதனைப் படைப்பர்= பாப்பா ராய்டு நம்பிக்கை