Alaioli
அறிவார்ந்த மாணவர்கள் சமுதாயத்தை இலட்சியக் கனவோடு உருவாக்க வல்ல நல்லாசிரியர்கள் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத தினம்! பாப்பா ராய்டு வாழ்த்து

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம், மே 16 -  அறிவார்ந்த மாணவர்கள் சமுதாயத்தை இலட்சியக் கனவோடு உருவாக்க வல்ல சிறந்த போதனைகள் வழங்கி உயர்த்தும்  நல்லாசிரியர்கள் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்தம் சிறப்பையும் பெருமையையும் இந்த உலகுக்கு உணர்த்தும் உன்னத ஒரு தினமாம்,  ஆசிரியர் தினத்தில் நாடு தழுவிய அளவில் தற்போது பள்ளிகளில் உயர் கல்விக் கூடங்களில் பல்கலைக்கழகங்களில் சேவையில் இருந்து வரும் ஆசான்களுக்கும் பேராசிரியர்களுக்கும் , பதவி ஓய்வில் இருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை இந்த இனிய வேளையில்  தெரிவித்துக் கொள்வதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். 


கற்க கசடற கற்பவை கற்றப் பின் நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளின் நேரிய கருத்துக்கு ஒப்ப, பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு உரிய பணியை நேர்த்தியாக முடித்து, மாணவர்கள் சமுதாயத்தின் சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தரும் ஆசிரியர்களின் அளப்பரிய அளவிட முடியாத சேவைகளை நினைவில் நிறுத்தி அனைவருக்கும் தமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.- Alaiolinews

Leave a Comment