Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே 18- உடல் நலமும் மன வளமும் ஆரோக்கியமான நிலையில் இருப்பின் மாணவர்கள் மட்டுமின்றி மனிதர்கள் அனைவரும் வாழ்வில் மேம்படலாம், எதிர்காலப் பயணத்தில் தாங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்துக் காட்டலாம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழலாம் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வலியுறுத்தினார்.

எனவே, ஒவ்வொரு மனிதரும் ஆரோக்கியத்தை சரிவரக் கடைப்பிடித்தால் மட்டுமே உடல் நலம் மட்டும் இன்றி மனமும் ஆரோக்கியமாகச் செயல்படும் என்பதால், மனிதர்கள் அடிக்கொரு தடவை தங்களது உடல் ஆரோக்கியம் சேமத்தை மருத்துவப் பரிசோதனைகளில்உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
அதே வேளையில், சாரிங்கான் சிலாங்கூர் இலவச மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள வந்திருந்ததும் மகிழ்ச்சியை தமக்கு அளிக்கிறது என்று அவரது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், பந்திங் சட்ட மன்றத் தொகுதியில் எஸ்பிஎம் 2025 தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற 48 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை இந்த நிகழ்ச்சியில் நேரில் அழைத்து வழங்க சிறப்பிக்கப்பட்டதாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தெரிவித்தார்.

இங்கு, பந்திங் தெலுக் டத்தோ டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் இலவச மருத்துவ முகாமில் இவ்வட்டாரத்தில் பொதுமக்கள் பலரும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், இந்தியர் சமூகத் தலைவர் முருகன் குணசேகரன், சாமிதுரை, சிலாங்கூர் மாநில அரசின் அலுவலக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.-Alaiolinews


குற்றச்சம்பவங்கள்
MPV mewah lari operasi JPJ, ada 20 saman AES
கட்சி செய்திகள்
Krisis Perlis: Undi tidak percaya terhadap MB tak perlu tunggu Sidang DUN Perlis - Sanusi
கட்சி செய்திகள்
Hanya 3 AJK PKR Cabang Shah Alam keluar parti
TAMIL SCHOOL
மலாக்கா மாநிலத்தில் தேசிய நிலையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ' சதுரங்கச் சாணாக்கியன் ' விருது பெற்றது
இயற்கை பேரிடர்கள்
Bangunan runtuh: Seorang rakyat Malaysia meninggal dunia di Filipina
தேசிய செய்திகள்
Kerajaan jimat subsidi lebih RM4.22 juta, inisiatif bekerja dari rumah
தேசிய செய்திகள்
Ketua ‘Geng Rames’ tumpas ketika menuju ke India - Polis
இளைஞர் முன்னேற்றம்
சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறும் கபடியில் இந்திய கபடி வீரர்கள் சாதனைப் படைப்பர்= பாப்பா ராய்டு நம்பிக்கை