Alaioli
ஜெராம், தாமான் பெர்மாய் மக்கள் குடியிருப்புப் பகுதியில், ஏசான் ரஹ்மா மலிவு விலை பொருள் வாங்கும் திட்டத்தில் 150 பங்கேற்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர், மே 18 - கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர்களுடன் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் கை கோர்த்து இங்கு, தாமான் பெர்மாய் மக்கள் குடியிருப்பு ப்பகுதியில் நடத்திய மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை காய்கறி மற்றும் சமையலறைக்குத் தேவையான பொருட்களை வாங்கிட 150 பேர் பங்கேற்றனர் என்று கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் அருள் செல்வி நாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


காலை 9 மணியளவில் தொடங்கப்பட்ட மலிவு விலை விற்பனை நிகழ்ச்சி காலை 11.30 மணியளவில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தததாக அவர் கூறினார்.


அதேவேளையில், சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிப்ளி மூலம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இலவச மருத்துவ முகாமில் நேர்த்தியான மருத்துவர்களிடம் அழைக்கப் பட்டு, மலிவு விலை பொருள் வாங்க வந்தவர்களும் பரிசோதனை செய்து கொண்டனர் என்று அருள் செல்வி அலை ஒளியிடம் கூறினார்.-Alaiolinews


Post ImagePost ImagePost Image

Leave a Comment