Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், மே 18 - சிலாங்கூர் மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் வழங்கும் திட்டத்தில் , வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுயமாக தொழில் செய்து வருவோருக்கு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தில் மனு செய்து காத்திருந்த வேளையில், 33 பேரின் மனுக்கள் முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தகவல் தெரிவித்தார்.
மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி, இதற்கான பணிகளை நிறைவாக செய்து வருகிறார் என்றும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
ஐ..சீட் உதவிப் பொருள் வழங்கும் திட்டத்தில் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் வசித்து வரும் வசதி குறைந்த இந்திய குடும்ப உறுப்பினர்கள் ஃபாசா 1 உதவிப் பொருள் திட்டத்தில் அதற்கான பொருட்களைப் பெற்றுக் கொண்டதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.

அதே வேளையில், ஐ..சீட் உதவிப் பொருள் திட்டம் ஃபாசா 2 இன் வாயிலாக மனு செய்துள்ள கோலலங்காட், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களை ச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான மனுக்கள் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் மாத வாக்கில் உதவிப் பொருட்கள் வழங்கப் படும் என்று பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.
மேலும், ஐ..சீட் உதவிப் பொருள் திட்டம் வசதி குறைந்த அதே வேளையில் அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி க் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசின் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என்றும் பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தெரிவித்தார்.
இந்தக் கலந்தாய்வு நிகழ்ச்சியில் யூபேன் துணை இயக்குநர் இயக்குநரும் வறுமை ஒழிப்புப்பிரிவு அதிகாரியுமான புவான் ரஹாயு அலி, ஐ..சீட் உதவிப் பொருள் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி, பாப்பா ராய்டுவின் சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் சிலரும் கலந்து தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.-Alaiolinews
உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!